சின்னத்திரையின் அடுத்த காதல் திருமண ஜோடி – உடன் நடித்த நடிகையை மணமுடித்த கனா காணும் காலங்கள் நடிகர்.

0
3002
Britto
- Advertisement -

சின்னத்திரையில் மீண்டும் ஒரு காதல் ஜோடி திருமணம் செய்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே சின்னத்திரை சீரியல் நடிகை, நடிகர்கள் காதலித்து நிஜ வாழ்க்கையில் இணைந்து விடுகிறார்கள். ரீல் ஜோடிகளாக இருப்பவர்கள் நிஜ வாழ்க்கையில் ரியல் ஜோடிகள் ஆக மாறி வருகிறார்கள். இதற்கு காரணம் இவர்கள் ஒரே துறையை சேர்ந்தவர்கள்.

-விளம்பரம்-

இதனால் இருவரும் கேரியரை புரிந்து கொண்டு இசந்தோஷமாக ஒன்றாம் வாழலாம் என நினைத்துக் கொண்டும் திருமணம் செய்து கொள்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் மாதத்தில் பாதி நாட்கள் இருவருமே ஷூட்டிங்கில் இருப்பதினால் ஒன்றாகவே சேர்ந்து நேரத்தையும் செலவழித்து புரிந்து கொள்ளலாம் என்று நினைத்து தான் சமீப காலமாக சீரியலில் நடிக்கும் நடிகர்கள் நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள்.

- Advertisement -

அதில் ஆர்யன்- ஷபானா, ரேஷ்மா மதன்,சித்து-ஸ்ரேயா ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். அந்த வரிசையில் தற்போது பிரிட்டோ- சந்தியா ஜோடி இணைந்து இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த கனா காணும் காலங்கள் என்ற தொடரின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பிரிட்டோ. இதனை அடுத்து இவர் பல தொடர்களில் நடித்திருக்கிறார்.

குறிப்பாக, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சமீபத்தில் முடிவடைந்த ராஜா ராணி 2 சீரியல் இவர் வில்லனாக மிரட்டி இருந்தார். தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தவமாய் தவமிருந்து என்ற தொடரில் முதல் பாகத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. தற்போது இந்த சீரியலின் இரண்டாவது பாகம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

-விளம்பரம்-

பிரிட்டோ-சந்தியா திருமணம்:

மேலும், இந்த தொடரின் முதல் பாகத்தில் கதாநாயகியாக நடித்த சரண்யா ராமச்சந்திரனை தான் நடிகர் பிரிட்டோ காதலித்திருக்கிறார். இவரின் உண்மையான பெயர் சந்தியா. இந்த தொடரின் போது தான் இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது. பின் இவர்கள் இருவரும் இன்று திருமணம் செய்து இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து இருக்கிறார்கள்.

வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்:

இவர்களுடைய திருமணத்தில் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருந்தார்கள். அது மட்டும் இல்லாமல் இன்று சந்தியாவினுடைய பிறந்தநாள். காதலியின் பிறந்தநாள் அன்று பிரிட்டோ காதலியின் கரம் பிடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர்களுடைய திருமண புகைப்படம் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement