உடலில் இருக்கும் பிரச்சனை, விசாரணைக்கு நடுவே வெளியேற முயன்ற கனல் கண்ணன் – மீண்டும் கைது செய்த போலீசார்.

0
1148
- Advertisement -

மீண்டும் கனல் கண்ணன் கைதாகி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான ஸ்டண்ட் மாஸ்டராக திகழ்ந்தவர் கனல் கண்ணன். இவர் ஸ்டண்ட் மாஸ்டராக நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் பல சண்டை காட்சிகளிலும் வந்து கனல் கண்ணன் அசத்தியிருக்கிறார். 1991 ஆம் ஆண்டு சரத்குமார் நடித்த சேரன் பாண்டியன் படத்தின் மூலம் தான் சண்டை பயிற்சி இயக்குனராக கனல் கண்ணன் அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-

அதற்கு பின்பு இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் சண்டை பயிற்சியாளராக பணியாற்றி இருக்கிறார். மேலும், ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, சிம்பு, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் இவர் சண்டை பயிற்சியாளராக நடித்திருக்கிறார். கடைசியாக இவர் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த குருதி பூக்கள் என்ற படத்தில் தான் பணியாற்றியிருந்தார். அதற்கு பின் இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக பட வாய்ப்புகள் இல்லை. இதனால் சினிமா பக்கமே கனல் கண்ணன் இல்லாமல் இருந்தார்.

- Advertisement -

பெரியார் குறித்து கனல் கண்ணன் சொன்னது:

பின் இவர் சில வருடமாகவே இந்து முன்னணி அமைப்பில் செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற இந்து முன்னணி பொதுக்கூட்டம் ஒன்றில் கனல்கண்ணன் பேசி இருந்தார். அந்த விழாவில் கனல் கண்ணன், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் முன்பு கடவுள் இல்லை என்று சொன்னவர் சிலை இருக்கிறது. அந்த சிலையை உடைக்க வேண்டும். அந்த நாள் தான் இந்துக்களின் எழுச்சி நாள் என்று பேசி இருக்கிறார். இப்படி கனல் கண்ணன் பேசிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள்.

அது மட்டுமில்லாமல் அவரை கைது செய்ய வேண்டும் என்றும் குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும் எனவும் பலரும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து இருந்தார்கள். அதில் சிலர், மாட்டு கோமியத்தை குடிக்கிறவனுக்கு என்னடா தெரியும் பெரியாரின் பகுத்தறிவை பற்றி என்றும் கூறி இருந்தார்கள். மேலும், கலவரத்தை உண்டாக்கும் வகையில் கனல் கண்ணன் பேசியது குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் துறையினர் இரு பிரிவுகளின் கீழ் கனல் கண்ணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

-விளம்பரம்-

கனல் கண்ணன் குறித்த சர்ச்சை:

இது தொடர்பாக கனல் கண்ணனை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி போலீஸ் கைது செய்திருந்தது. பின் கனல் கண்ணன் ஜாமின் கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். ஆனால், அது தள்ளுபடி செய்யப்பட்டது. அதன் பின் போராடி கனல் கண்ணன் வெளியே வந்தார். இப்படி இவர் ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொண்டு இருக்கிறார். அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னாடி இவர் தன்னுடைய டீவ்ட்டர் பக்கத்தில் வெளிநாட்டு கிறிஸ்துவ மதபோதகர் குறித்து அவதூறாக பேசி வீடியோ ஒன்றை பகிர்ந்து இருந்தார். இது குறித்து சோசியல் மீடியாவில் பரபரப்பு ஏற்படுத்தி இருந்தது.

கனல் கண்ணன் மீது புகார்:

இது தொடர்பாக ஜோசப் பெணடிக் என்பவர் நாகர்கோவில் சைபர் கிரைம் காவல்துறையிடம் கனல் கண்ணன் மீது புகார் அளித்திருக்கிறார். இதனை அடுத்து கனல் கண்ணன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும், நாகர்கோவில் எஸ்பி அலுவலகத்திற்கு கனல் கண்ணன் விசாரணைக்காக வந்திருக்கிறார். ஆனால், விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே கனல் கண்ணன் எஸ்பி அலுவலகத்தை விட்டு வெளியே செல்ல முயன்றிருக்கிறார். ஆனால், அவரை போலீசார் தடுத்து நிறுத்தி எங்கேயும் செல்லக்கூடாது என்று கூறுகின்றனர்.

சண்டையில் ஈடுபட்ட கனல் கண்ணன்:

பிறகு எஸ் பி அலுவலகத்தின் வெளியே இருந்த இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் காவல்துறையிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார்கள். பின் கனல் கண்ணன் தனக்கு நீரிழிவு நோய் இருக்கிறது, சரியான நேரத்தில் உணவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். ஆனால், போலீஸ் விசாரணையின் முன் வெளியே செல்ல யாருக்கும் அனுமதி கிடையாது என்று கண்டிப்பாக பேசி இருக்கிறார்கள். இதனால் கனல் கண்ணனுக்கும் போலீசுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது தற்போது இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement