தமிழில் வெளியான ‘காஞ்சனா’ திரைப்படங்கள் ரசிகர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. நடிகர் ராகவா லாரன்ஸ் ‘காஞ்சனா ‘ திரைப்படத்தை ஹிந்தியில் இயக்க திட்டமிட்டிருந்தார். இதில் இந்தி நடிகர் அக்சய் குமார் நடிப்பதாக இருந்தது. கியாரா அத்வானி ஹீரோயினாக நடிக்கும் படத்தில் சரத்குமார் நடித்த திருநங்கை கேரக்டரில் அமிதாப் பச்சன் நடிப்பார் என நடிப்பதாக இருந்தது.
இந்த நிலையில் கடந்த 18ஆம் தேதி ‘லட்சுமி பாம்பி என்ற பெயரில் இந்த படத்தின் பிரஸ்ட் லுக் போஸ்ட்டரை அக்சய் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இதற்கு லாரன்ஸ், பிரஸ்ட் லுக் வெளியாகும் விஷயம் தெரியாது என்றும் இதனால் ” மதியாதார் தலைவாசல் மிதியாதே என்ற தமிழ் முதுமொழி ஒன்று உள்ளது அதன் படி நான் ‘லக்ஷ்மி பாம்ப் படத்திலிருந்து வெளியேறுகிறேன் ” என்று கூறியிருந்தார்.
ஆனால், கடந்த சில நாட்களுக்கு இந்த படத்தை லாரன்ஸ் இயக்குவதற்காக ‘லட்சுமி பாம் ‘ பட குழுவும் படத்தின் தயாரிப்பாளரும் , லாரன்ஸ்ஸை நேரில் சந்தித்து பேச இருப்பதாக நடிகர் லாரன்ஸ் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்திருந்தார். எனவே, இந்த சந்திப்பிற்கு பின்னர் லாரன்ஸ் இந்த படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கபட்டது.
இதையடுத்து லட்சுமி பாம் திரைப்படம் குழுவினர் சமீபத்தில் லாரன்ஸை சந்தித்துள்ளனர். இதையடுத்து லாரன்ஸ்ஸே இந்த படத்தை மீண்டும் தயாரிக்க உள்ளார். இந்த தகவலை லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் லாரன்ஸின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.