2020ல் கம்போஸ், 2k கிட்ஸ்களை கவரும் வார்த்தைகள், ட்ரெண்டிங் பாடலை பாடிய இவரின் பெற்றோர்கள் இந்த பாடகர் ஜோடி தானா.

0
253
- Advertisement -

தற்போது உள்ள காலகட்டத்தில் சினிமா பாடல்களுக்கு இணையாக ஆல்பம் பாடல்கள் ஹிட் அடித்து விடுகிறது. அதிலும் ஒரு பாடல் ஹிட் அடித்துவிட்டால் அது இன்ஸ்டாகிராம், ட்விட்டர் மூலம் ரசிகர்கள் வேற லெவலில் ட்ரெண்ட் செய்து விடுகின்றனர். அந்த வரிசையில் இன்ஸ்டா ரீல்ஸ்களில் அடிக்கடி வந்து பலரின் பேவரைட் லிஸ்டில் அமைந்தது தான் ‘கட்சி சேர’ என்ற ஆல்பம் பாடல். இன்டெண்டன்ட் இசைக் கலைஞர்களாக திகழ்ந்த பலர் இசை துறையில் ஜொலிக்க துவங்கி இருக்கின்றனர்.

-விளம்பரம்-

அந்த வகையில் இன்டெண்டன்ட் இசைக் கலைஞராக இருந்து தற்போது யூடுயூபில் கலக்கி கொண்டு வரும் இந்த பாடலுக்கு இசையமைத்தவர் இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர். இவர் பாடகர்கள் திப்பு – ஹரினி ஆகியோரின் மகன் ஆவார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது வசீகர குரலும், சம்யுக்தாவின் கவர்ச்சியான நடனமும் இந்த பாடலின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமான பார்க்கப்படுகிறது.

- Advertisement -

அதிலும் சம்யுக்தாவின் குறிப்பிட்ட அந்த ஸ்டேப் இன்ஸ்டாவில் ட்ரெண்ட் ஆனது. தற்போது வரை இந்த பாடல் 15மில்லியன் பார்வையாளர்களை குவித்து இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் இந்த பாடல் உருவான விதம் குறித்து சாய் அபயங்கர் பேட்டி அளித்துள்ளார். அதில் பேசியுள்ள அவர் ‘ 2020 கோவிடின் போதே இந்த பாடலை கம்போஸ் செய்துவிட்டோம். பாடல் வரிகளை எழுதிக் கொடுத்ததுமே பாடல் ஷூட்டிங் இரண்டு நாளைக்கு முன்பு நடன பயிற்சி எடுத்துக் கொள்ள சென்றேன்.

பின்னர் எப்படி இந்த பாடலுக்கு நடனம் அமைப்பது என்று திட்டமிட்டு நாங்கள் நினைத்தபடியே சூட்டை செய்து முடித்தோம்.எட்டாம் வகுப்பு தேர்வு விடுமுறை நாட்களில் அப்பாவின் சூர்யாவிற்கு சென்று சில விஷயங்களை கற்றுக் கொண்டேன் அதன் பின்னர் முறைப்படி இசையை கற்றுக் கொண்டேன் ஸ்ரீராம் பார்த்தசாரதி சாரிடம் தான் பாடல் பாடுவதை கற்றுக் கொண்டேன்.

-விளம்பரம்-

ரகுமான் சார் தான் முதன் முதலில் இந்தப் பாடலை கேட்டார் அவருக்கு மிகவும் பிடித்துப் போக அவரே இந்த பாடலை ஷேர் செய்தார். அவரைத் தொடர்ந்து அனிருத், சந்தோஷ் நாராயணன். ஜீவி பிரகாஷ் போன்ற பலரும் பாராட்டினார்கள். மேலும், தனுஷ் சார் இந்த இந்த பாடலை கேட்டு விட்டு பாராட்டி, நல்லா பண்ணியிருக்கீங்க, குரல் நன்றாக இருக்கிறது கண்டிப்பாக ஹிட் ஆகும் என்று தனுஷ் சார் சொன்னார்’ என்று பேசி உள்ளார்.

இந்த பாடலில் தன்னுடைய நடனத்தின் மூலம் கவர்ந்த சமித்தா பேசுகையில் இந்த பாடலுக்கு இப்படி ஒரு வரவேற்பு கொடுத்ததற்கு மிகவும் நன்றி இந்த பாடலை முதன்முறையாக கேட்கும் போதே கண்டிப்பாக ஹிட் ஆகும் என்று நினைத்தேன் ஆனால் இந்த பாடலுக்கு ஏற்றார் போல நடனம் இருக்காது கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கும் இது எனக்கு புதுமையாக இருந்தது இந்த பாடலுக்கு டான்சஸ் கிளப்பை சேர்ந்த அணு தான் கொரியாகிராப் செய்தார்கள் ஆரம்பத்தில் ஸ்டெப்ஸ் எல்லாம் பார்க்கும் போது பயமாக இருந்தது அதை எல்லாம் தாண்டி எனக்கு பயிற்சி கொடுத்தார்கள்’ என்று கூறி இருக்கிறார்.

Advertisement