தளபதி போல கீர்த்தி சுரேஷ் செய்த செயல்.! பாராட்டிய விஜய்.! இதுவரை எந்த நடிகையும் செய்யவில்லை.!

0
368

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘சர்கார்’ படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். விஜய்யுடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள நடிகை கீர்த்தி சுரேஷ் ‘சர்கார்’ படக்குழிவிற்கு சர்ப்ரைஸ் ஒன்றை அளித்துள்ளார்.

sarkar

தற்போது 90 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இந்த படத்திற்கான பாடல் காட்சிகள் அமெரிக்கா, லாஸ் வேகாஸ்ஸில் நடைபெற்று வருகிறது. இதில் நடிகை வரலட்சுமியும் பங்குபெற்றுள்ளார். மேலும், இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷிர்கான காட்சிகள் முடிவடைந்து விட்டது.

இந்நிலையில் ‘சர்கார்’ படக்குழுவில் இருந்து விடைபெறுவதற்க்கு முன்பாக இந்த படத்தில் பணியாற்றிய 150 கலைஞர்கள் அனைவருக்கும் தலா 1 கிராம் தங்க நாணயத்தை தனது சார்பாக வழங்கியுள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ். இந்த செயல் படகுழிவினரை மிகவும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Actress keerthi suresh

பொதுவாக தன்னுடன் பணிபுரியும் கலைஞர்களுக்கு பிரியாணி போடுவது அல்லது புகைப்படம் எடுத்துக் கொள்வது என்று தான் மற்ற நடிகைள் செய்ததாக நாம் இதுவரை கேள்வி பட்டிருக்கிறோம். ஆனால், முதல் முறையாக 150 கலைஞருக்கு கீர்த்தி சுரேஷ் இப்படிபட்ட பரிசை அளித்துள்ளது மிகவும் பாராட்டகூடிய விடயம் தான்.