தமிழ் சினிமா பல மலையாள கதாநாயகிகளை இறக்குமதி செய்துள்ளது. அந்த வரிசையில் கீர்த்தி சுரேஷும் ஒருவர். தற்போது தென்னிந்திய சினிமாவில்
முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழில் முன்னணி நடிகர்களான விஜய், விக்ரம், சூர்யா,தனுஷ் என்று அனைவருடனும் நடித்து விட்டார்.
தற்போது இந்தி திரையுலகில் அறிமுகமாக இருக்கிறாராம்.
நடிகையர் திலகம் படம் இவருக்கு நல்ல ஒரு பெயரை ஏற்படுத்தி தந்தது. விஷுலுடம் சண்டக்கோழி, விஜயுடன் ‘சர்கார்’ என்று தொடர்ந்து இரண்டு படங்கள் வெளியானாலும், இரண்டு படத்திலும் அம்மணியை கலாய்த்து பல மீம்கள் வெளிவர படும் அடைந்தார் கீர்த்தி.
இதனிடையே கீர்த்தி சுரேஷ், தற்போது இந்தி படம் படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது. இந்தப் படத்தை அஜித் 59 பட தயாரிப்பாளரும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் தயாரிக்க உள்ளதாககூறப்படுகிறது.
இந்த படத்தை ‘பதாய் ஹோ’படத்தை இயக்கிய இயக்குநர் அமித் ஷர்மா இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறது பாலிவுட் வட்டாரம். பாலிவுட் செல்வதால் தனது உடலை குறைத்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். தற்போது இந்தி நடிகைகளுக்கு இணையாக தனது உடலை குறைத்துள்ளார் கீர்த்தி.