டேய் உன் மூஞ்சி எப்படி இருக்கு தெரியுமா.! ஜெயம் ரவியை கலாய்த்த பிரபல இயக்குனர்.!

0
712

சமீபத்தில் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ஜெயம் ரவி ரஷி ரஷி கண்ணா நடிப்பில் வெளியான ‘அடங்காமறு ‘ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது.  இந்த படத்தை தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவி ‘கோமாளி’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்காக ஜெயம் ரவி 18 கிலோவை குறைத்துள்ளார். மேலும், இந்த படத்தில் அவருக்கு 9 கெட்டப்பும் இருக்கிறது.

- Advertisement -

அதில் ராஜா, ஆதிவாசி, பிரிட்டீஷ் காலத்து அடிமை, 1990-களில் வாழ்ந்த இளைஞர் என்பது நான்கு வேடங்களாம். மற்ற கதாபாத்திரங்களை படக்குழு ரகசியமாக வைத்துள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி இருந்தது.

அதில் ஒரு பைத்திக்கார கெட்டப்பில் இருக்கிறார் ஜெயம் ரவி. இந்நிலையில் இதனை பார்த்த ஜெயம் ரவியின் சகோதரரும் இயக்குருமான மோகன் ராஜா “என்னடா உன் மூஞ்சி இந்த இமோஜிக்கே போட்டியா இருக்கு. சூப்பர் ஆக இருக்கு. எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ஆல் தி பெஸ்ட்.” என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement