முதல் படமே கமல் படம் – கமல் – மணிரத்னம் படத்தில் இணைந்த குஷ்புவின் மகள். என்ன ரோல் தெரியுமா?

0
222
Ksuboo
- Advertisement -

கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் உருவாகவுள்ள கமலின் 234 ஆவது படத்தில் குஷ்புவின் மகள் அனந்திதா இணைந்துள்ளார்.பாலிவுட்டை போல தமிழ் சினிமாவிலும் எத்தனையோ வாரிசு நடிகர், நடிகைகள் இருக்கின்றனர். அந்த வகையில் குஷ்பூவின் மகளும் தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார். சினிமா உலகில் 90 களின் காலகட்டத்தில் இளைஞர்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்தவர் நடிகை குஷ்பு. மேலும், ரசிகர்கள் குஷ்பு மீது உள்ள பற்றின் காரணமாக அவருக்கு கோவில் ஒன்று கட்டி உள்ளார்கள். தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

குஷ்பூ, படங்களில் குணச்சித்திர வேடங்களிளும்,சின்னத்திரையிலும் நடித்து வருகிறார். குஷ்பு கடந்த 2000ஆம் ஆண்டு சினிமா துறையில் பிரபலமான இயக்குனர் சுந்தர்.சியும், குஷ்பூவும் திருமணம் செய்து கொண்டார்கள்.மேலும், இவர்கள் திருமணம் காதல் திருமணம் தான். குஷ்பு மற்றும் சுந்தர் சி தம்பதியருக்கு அவந்திகா, அனந்திதா என்ற இரு மகளும் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் குஷ்புவை போல மிகவும் குயூடாக பப்லியான தோற்றத்தில் தான் இருந்தார்கள்.

- Advertisement -

இருப்பினும் இவர்கள் உருவத்தை வைத்து பல முறை பலரும் கேலி கிண்டல்களை செய்தார்கள். அவ்வாரான கிண்டல்களுக்கு குஷ்புவும் பல முறை பதிலடி கொடுத்துள்ளார். குஷ்பூவின் மூத்த மகளான அவந்திகா தான் சினிமாவில் களமிறங்க இருக்கிறார். அவந்திகா லண்டனில்  நடிப்பு பயிற்சி பள்ளியில் தனது படிப்பை முடித்த நிலையில் தற்போது அவர் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார். இதனால் அவர் சமூக வலைதளத்தில் கூட தலை காண்பிக்காமல் இருந்து வருகிறார்.

குஷ்பூவின் மூத்த மகளை போல இளைய மகளும் தற்போது சினிமாவில் களமிறங்கி இருக்கிறார். கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் உருவாகவுள்ள கமலின் 234 ஆவது படத்தில் குஷ்புவின் மகள் அனந்திதா இணைந்துள்ளார். கமல் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் 1987 ஆம் ஆண்டு நாயகன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. ஆனால், இந்த படத்திற்கு பின்னர் இவர்கள் இருவரும் இணைந்து படம் பண்ணவில்லை.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் 35 ஆண்டுகள் கழித்து தற்போது கமல் மற்றும் மணிரத்னம் ஆகியோர் இணைந்து இருக்கின்றனர். இந்தியன் 2 படப்பிடிப்பை முடித்த கமல் தற்போது தனது அடுத்த படத்தில் கவனம் செலுத்த துவங்கி இருக்கிறார். அந்தவகையில் 233 வது படத்திற்காக எச். வினோத்துடன் கூட்டணி அமைத்தார். அதேசமயம் 234 ஆவது திரைப்படத்தையும் மணிரத்னம் இயக்கத்தில் தொடங்குகிறார்.

இதற்கான பூஜை சமீபத்தில் நடந்து முடிந்தது அதற்கான வீடியோவை தற்போது வெளியிட்டு இருக்கின்றனர். இந்த படத்தில் நடிகை குஷ்பூவின் இளைய மகள் அனந்திதாவும் இணைந்து இருக்கிறார். இந்த படத்தில் மணி ரத்னமின் உதவி இயக்குனராக அனந்திதா பணியாற்ற இருக்கிறார். மேலும் கமல்ஹாசன் பிறந்தநாளன்று இந்த திரைப்படத்திற்கான ப்ரோமோ வீடியோவையும் பட குழுவினர் வெளியிட திட்டமிட்டு இருக்கின்றனர்.

Advertisement