விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிக பிரபலமான நிகழ்ச்சி என்றால் அது “நீயா நானா” நிகழ்ச்சி தான். நீயா நானா கோபிநாத் என்று சொன்னாலே போதும் சின்ன குழந்தைகள் கூட அடையாளம் சொல்லுவார்கள். அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமானவர் கோபிநாத். 2006 ஆம் ஆண்டு முதல் கோபிநாத் அவர்கள் “நீயா நானா” என்ற நிகழ்ச்சியில் பணியாற்றத் தொடங்கினார். ஒரு தலைப்பு எடுத்து கொண்டு அதை ஆதரிப்போரையும், எதிர்ப்போரையும் எதிர் எதிராக அமர வைத்து சமூக பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நிகழ்ச்சி தான் “நீயா நானா”.
இந்த நிகழ்ச்சிக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. சமுதாயத்தில் உள்ள பழமை வாதங்களுக்கு எதிராக இவர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அதிலும் அழகு, பெண்கள், காதல், திருமணம், குடும்பம், நட்பு, ஆண்கள், காதல், அரசியல், சட்டம், சமுதாயம், கல்வி விளையாட்டு, சமூக ஊடகம் என்று பல தலைப்புகளில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இப்படி கடந்த 23 வருடங்களுக்கு மேலாக இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. மேலும், இந்த நிகழ்ச்சியில் ஒரு சில நிமிடம் வந்து சென்றாலுமே மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமாகி வருகிறார்கள்.
நீயா நானா நிகழ்ச்சி:
அந்த வகையில் கடந்த வாரம் நடந்த எபிசோட்டில் வந்த கணவன் சபரி, மனைவி தமிழரசி இருவரும் கலந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் பேசியது தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, நிகழ்ச்சியில் மனைவி, என்னுடைய கணவர் ஆபீஸிலிருந்து வந்து காபி போட்டு கொடுத்தால் தான் குடிப்பேன் என்று இப்படி கூறி இருந்தார். இதை பார்த்து பலரும் அவரை விமர்சித்து இருக்கிறார்கள். இது குறித்து தமிழரசி-சபரி தம்பதிகள் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார்கள்.
தமிழரசி-சபரி பேட்டி:
அதில் அவர், நிகழ்ச்சியில் நான் எதார்த்தமாக பேசிய விஷயத்தை தவறாக புரிந்து கொண்டார்கள். இது இப்படி வைரலாகும் என்று நினைக்கவே இல்லை. என்னுடைய கணவர் வேலைக்கு போயிட்டு வந்து காபி போட்டுக் கொடுத்தால் நாங்கள் இருவரும் சேர்ந்து குடித்துக் கொண்டு கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருக்கலாம் என்று நினைத்து சொன்னேன். ஏன்னா, நானும் வேலை பார்த்து கொன்று வீட்டில் குழந்தைகளை கவனித்துக் கொள்கிறேன். அவரும் வேலை பார்க்கிறார். இதனால் என்னுடைய கணவர் வேலைக்கு போயிட்டு வந்து அவர் போட்டு தரும் காப்பியை குடித்து கொஞ்ச நேரம் அவருடன் பேசிக் கொண்டிருக்கலாம் என்று தான் நினைத்து கேட்பேன்.
தமிழரசி-சபரி குறித்த தகவல்:
இதை தான் அந்த நிகழ்ச்சியில் சொல்ல வந்தேன். அதை வேறு விதமாக சொல்லிவிட்டேன் என்று கூறியிருக்கிறார். இதை தொடர்ந்து அவர் வாழ்க்கையில் நடந்த மோசமான சம்பவம் குறித்து பகிர்ந்து, நான் நெய்வேலி சேர்ந்தவர். என்னுடைய கணவர் கன்னடத்தை சேர்ந்தவர். இருவருமே சென்னையில் ஒன்றாக வேலை செய்திருந்தோம். அப்போதுதான் எங்களுக்குள் காதல் ஏற்பட்டது. எங்களுடைய காதலுக்கு வீட்டில் சம்மதம் தெரிவிக்கவில்லை.வீட்டில் சம்மதித்த பிறகு தான் திருமணம் செய்து கொண்டோம். இருந்தாலும் இரண்டு வீட்டிலும் முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் நாங்கள் ரொம்ப பினான்சியாக சிரமப்பட்டு இருந்தோம்.
மகனுக்கு நடந்த கோர சம்பவம்:
திருமணத்திற்கு பிறகு நான் பார்த்த வேலையும் விட்டுவிட்டேன். இதனால் ரொம்ப கஷ்டப்பட்டு கொண்டு இருந்தேன். அப்போது எங்களுடைய இரண்டு வயது மகனை என்னுடைய சொந்த ஊரான நெய்வேலியில் என்னுடைய பெற்றோர் வீட்டில் விட்டு இருந்தேன். அப்போது ஒரு நாள் குழந்தயை பார்க்குக்கு விளையாட என்னுடைய பெற்றோர்கள் கூட்டிட்டு போயிருந்தார்கள். அப்போது எதிர்பாராத விதமாக ஐந்து தெரு நாய்கள் சேர்ந்து என்னுடைய குழந்தையை கடித்து குதறி இருக்கிறது. அதற்குப் பிறகு ஹாஸ்பிடலில் நாங்கள் சேர்த்தோம். 60 தயலுக்கு மேல் என் குழந்தை உடம்பில் போட்டு இருக்கிறார்கள். என் குழந்தை ரொம்ப சித்திரவதை பட்டிருக்கிறது. பல மாதங்கள் நாங்கள் ஹாஸ்பிடலில் தான் இருந்தோம். என்னுடைய குழந்தைக்கு தலையில் உடம்பில் எல்லாம் பிளாஸ்டிக் சர்ஜரி எல்லாம் செய்திருக்கிறார்கள் என்று ரொம்ப எமோஷனலாக தமிழரசி பேசுகிறார். இதை பார்த்து பலரும் தவறாக புரிந்து கொண்ட கணவன் -மனைவி தம்பதிக்கு ஆறுதலாக கமெண்ட் போட்டு வருகிறார்கள்.