Comeback கொடுத்தார்களா கொண்டா மற்றும் சமந்தா – எப்படி இருக்கிறது ‘குஷி’ ? விமர்சனம் இதோ.

0
1721
- Advertisement -

இயக்குனர் ஷிவா நிர்வானா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குஷி. இந்த படத்தில் விஜய் தேவர் கொண்டா, சமந்தா, சரண்யா பொன்வண்ணன், லக்‌ஷ்மி, ரோஹினி, ஜெயராம், சச்சின் கெட்டேகர் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியாகி இருக்கும் குஷி படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் ஹீரோ விஜய் தேவர் கொண்டா காஷ்மீரில் இருக்கிறார். இவருக்கு அரசு வேலை கிடைக்கிறது. பின் ஒரு நாள் இவர் கதாநாயகி சமந்தாவை சந்திக்கிறார். முதல் சந்திப்பிலேயே ஹீரோவிற்கு காதல் வந்து விடுகிறது. பின் இவர் தன்னுடைய காதலுக்காக என்னென்னவோ செய்து கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் சமந்தா அவருடைய காதலை ஏற்கிறார். ஆனால், இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் உடைய பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

- Advertisement -

திருமணத்திற்கும் ஒற்றுக்கொள்ளவில்லை. இதனால் இவர்கள் பதிவு திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆரம்பத்தில் இவர்களுடைய திருமண வாழ்க்கை நன்றாக தான் சென்று கொண்டிருக்கிறது. போகப் போக இவர்களுக்குள் சண்டை ஏற்படுகிறது. இதனால் திருமண வாழ்க்கை நன்றாக இல்லை என்று இருவரும் புலம்புகிறார்கள். இருவருக்கும் இருந்த காதலும் மறைந்து விடுகிறது. பின் ஒருவரை ஒருவர் வெறுக்க தொடங்கினார்கள்.

இறுதியில் இவர்கள் ஒன்று சேர்ந்தார்களா? இவர்களின் சண்டைக்கு காரணம் என்ன? ஏன் இப்படி காதலர்கள் மத்தியில் திருமணம் செய்து கொண்ட உடன் சண்டை ஏற்படுகிறது? என்பதே படத்தின் மீதி கதை. இது இயக்குனரின் நான்காவது படம் என்பதால் இதை சிறப்பாகவே கொடுத்திருக்கிறார் என்று சொல்லலாம். படத்தில் நிறைய காதல் கதை, தேவையான இன்டிமேட் காட்சிகள், காமெடி, சென்டிமென்ட் ,ஆக்சன் என்று அனைத்தையும் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் கொடுத்திருக்கிறார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் சமந்தா, விஜய தேவர் கொண்டா கெமிஸ்ட்ரி அழகாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்த படம் இருவருக்குமே கம்பக் என்று சொல்லலாம். ஏன்னா, கடைசியாக விஜய் தேவர் கொண்டாவின் நடிப்பில் வெளிவந்த லைகர், சமந்தாவின் நடிப்பில் வெளிவந்த சாகுந்தலம் இரண்டு படமே தோல்வி அடைந்தது. இதனால் இவர்களுக்கு குஷி படம் ஒரு நல்ல கம்பேக் கொடுத்திருக்கிறது. இவர்களை அடுத்து படத்தில் வரும் பிற நடிகர்களும் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

படத்தின் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. ஆனால், படத்தின் முதல் பாதி தான் ரசிகர்கள் மத்தியில் சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இன்னும் கொஞ்சம் படத்தின் நிளத்தை குறைத்திருக்கலாம். ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள். தேவையில்லாத சில காட்சிகள் வந்து செல்கிறது. சில இடங்களில் வசனங்கள் கடுப்பேற்றி இருக்கிறது. சித்தாந்தத்திற்கும் சாஸ்திரத்திற்கும் வரும் சண்டையை விட மனித உணர்வுகளே பெரியது என்பதை மையமாக வைத்து இந்த படத்தை இயக்குனர் கொடுத்து இருக்கிறார். ஆக மொத்தம் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த படம் ஓகே தான்.

நிறை:

சமந்தா- விஜய் தேவர் கொண்ட நடிப்பு சிறப்பு

காதல் ரொமான்டிக் கதை

முதல் பாதி

பின்னனி இசை ஒளிப்பதிவு ஓகே

எமோஷனல், சென்டிமென்ட், காதல், காமெடி அனைத்தையும் இயக்குனர் கொடுத்திருக்கிறார்

கதைகளம் அருமை

குறை:

படத்தின் நீளத்தை குறைத்து இருக்கலாம்

நிறைய லாஜிக் குறைபாடுகள்

இக்காண்டம் பாதி சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கதைக்களம் கொண்டு சென்ற விதத்தில் இயக்குனர் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்

மொத்தத்தில் குஷி- ரசிகர்கலை ஓரளவிற்கு தான் குஷிப்படுத்தி இருகிறது.

Advertisement