மீண்டும் லட்சுமி குறும்பட இயக்குனர் படத்தில் நடிக்கிறாரா? லட்சுமி பிரியா

0
876
lakshmii

லட்சுமி என்ற ஒரு குறும்படத்தின் மூலம் மக்களை தன் பக்கம் திருப்பியவர் இயக்குனர் சார்ஜுன். இந்த குறும்படம் கடுமையான விமர்சனங்களை பெற்றாலும், ஒரு புறம் பெண்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும் என பேசும் அளவிற்கு இருந்தது.

lakshmi

- Advertisement -

இந்த குறும்படத்தில் நடித்த லட்சுமி பிரியா சந்திரமௌலி கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளனர். அதன்பின்னர், இயக்குனர் சார்ஜுன் ‘மா’ என்ற குறும்படத்தை இயக்கினார். இந்த படமும் சற்று சர்சைக்குரிய படமாகவே அமைந்தது.

இந்த படத்தில் 10ம் வகுப்பு படிக்கும் ஒரு குழந்தை கற்பமாகிறாள், அதனை அந்த குழந்தையின் தாய் எப்படி எதிர்கொள்கிறாள் என்பதுதான் கதை. இதுவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

குறும்படங்களை மட்டுமே இயக்கிய சார்ஜுன் தற்போது ஒரு முழு நீல படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் பெயர், ‘எச்சரிக்கை! இது மனிதர்கள் நடமாடும் பகுதி’ என்பதாகும்.

இந்த படத்தில் சத்தியராஜ், வரலட்சுமி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் ஒரு பாடல் நாளை ரிலீஸ் ஆகிறது. இந்த படத்திற்கு அடுத்து, நயன்தாராவை வைத்து ஒரு படத்தினை இயக்குகிறார் சர்ஜுன்.

Chennai: Actress Lakshmi Priyaa during the photo shoot (Photo: IANS)