அனைவரும் எதிர்பார்த்த விஜய்யின் லியோ படம் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மாஸ்டர் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன் தாஸ், தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து இருக்கின்றார்கள். இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக உருவாகி இருக்கிறது. ரசிகர்கள் மத்தியில் லியோ படம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.
லியோ படம் LCU தான். படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாக இருந்தது. ஆனால், இரண்டாம் பாதி அதே அளவுக்கு இல்லை என்றும் விமர்சனங்கள் வந்தது. குறிப்பாக, படத்தில் விஜய் அன்பான தந்தையாகவும், வில்லன்களை வெறித்தனமாக வேட்டையாடும் மான்ஸ்டர் காட்சிகளிலும் பட்டையை கிளப்பி இருக்கிறார். லியோ படத்தை பார்த்து திரை பிரபலங்கள் பலருமே பாராட்டி கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். நவம்பர் 4 ஆவது வாரத்தில் லியோ திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
லியோ வெற்றி விழா:
ஆக மொத்தம் படம் எதிர்பார்த்ததை விட மிகப் பெரிய அளவில் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் லியோ வெற்றியை சிறப்பாக கொண்டாட செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனம் முடிவு செய்து இருக்கிறது. நவம்பர் ஒன்றாம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் வெற்றி விழாவை நடத்த இருக்கிறார்கள். இந்த நிலையில் லியோ படம் குறித்து சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் பேட்டி ஒன்று அணிந்திருந்தார். அதில் லியோ படத்தில் விஜயின் கதாபாத்திரம் குறித்து லோகேஷ் கூறியிருந்தது, லியோவில் உண்மையான கதையை பார்த்திபன் தன்னுடைய கண்ணோட்டத்தில் சொல்லவே இல்லை.
லோகேஷ் அளித்த பேட்டி:
அது ஹிருதயராஜின் சொன்ன கதை. படத்தில் இருந்து ஏதாவது சொல்லும்போது கதை முழுக்க முழுக்க அவருடைய கண்ணோட்டத்தில் இருந்ததாக ஒரு டயலாக் வரும். ஆனால், எடிட்டர் ஃபிலோவுடன் நடந்த வாக்குவாதத்தில் அந்த டயலாக்கை நீக்கிவிட்டேன். உண்மையில் ஃபிளாஷ்பேக் காட்சிகள் 40 நிமிடங்கள் இருந்தது. ஆனால், அது படத்தில் வரவில்லை. கௌதம் மேனனின் கதாபாத்திரத்துக்கு நிறைய முக்கியத்துவம் படத்தில் சேர்த்து இருந்தேன். முதல் காட்சியில் அவர் துப்பாக்கியில் சுட தடுமாறுவார். ஆனால், கிளைமாக்ஸ் கட்சியில் சரியாக அதே துப்பாக்கியில் சுடுவார்.
லியோ கதாபாத்திரம் குறித்து சொன்னது:
இது அவர் ஒரு அலார்ட் போலீஸ் என்பதை காட்டும். அது மட்டும் இல்லாமல் லியோ கதாபாத்திரம் சம்பந்தமாக அவருக்கும் தொடர்பு இருந்தது. மேலும், லியோ கதாபாத்திரத்தில் விஜய் கதாபாத்திரத்துக்கு நிறைய லெவல்கள் இருந்தது. உதாரணமாக, விஜய், ஆரம்ப சண்டை காட்சிக்கு பிறகு அவர் கடையில் உட்கார்ந்து அழுவார். பின் பார்த்திபன் என்று யாராவது கூப்பிட்டால் திரும்பவே மாட்டார். இரண்டிலிருந்து மூன்று முறை கூப்பிட்டால் மட்டுமே திரும்புவார். இதற்கு காரணம் அவர் பார்த்திபன் இல்லை லியோவாக மாறுகிறார் என்பதை காண்பிப்பதற்காக தான்.
LCU குறித்து சொன்னது:
அதுமட்டுமில்லாமல் சில கேள்விகளுக்கு படத்தில் பதில் சொல்லாமலும் விட்டுவிட்டேன். லியோவின் துப்பாக்கி சூட்டு தழும்புகள் அவன் உடம்பில் இருக்க வேண்டும். பார்த்திபன் கதாபாத்திரம் இரண்டு மூன்று முறை சட்டை இல்லாமல் இருப்பதை காட்டி இருக்கிறேன். லியோ தனக்கென ஒரு வரலாற்றை போலியாக உருவாக்கிக் கொண்டவர். ஆவணங்கள், சான்றிதழ்கள், புகைப்படங்கள் என பல வகையில் உருவாக்கி இருப்பவர்.
அதனால் அவருடைய வடுக்கள் மற்றும் காயங்களை மறைப்பது அவருக்கு பெரிய விஷயம் இல்லை. லியோ தனது அடையாளத்தை மறைக்க நிறைய விஷயங்கள் செய்வார். LCU முழுவதும் அனாதை இல்லத்தைச் சேர்ந்த குழந்தைகள், அங்கு என்ன நடந்தது, எப்படி நடந்தது என்பதை அடிப்படையாகக் கொண்டது. இனிவரும் LCU படங்களில் இந்த கதையை நிச்சயம் சொல்வேன். லியோவின் பாத்திரம் பற்றிய இந்த படத்தில் கவனம் செலுத்த விரும்பினேன். இதனால் lcவை கட்டாயப்படுத்தி இணைக்க விரும்பவில்லை. இருப்பினும் அடுத்த வரும் கைதி 2 போன்ற படங்களில் எல்லா கதாபாத்திரங்களும் ஒன்றாக இணையும் என்று கூறியிருந்தார்.