டீ குடிக்க போன இடத்தில் கிடைத்த சுப்ரமணியபுரம் பட வாய்ப்பு – டும்கான் என்ற மாரி !

0
2690
maari

தமிழ் சினிமாவின் அற்புத படைப்புகளில் ஒன்று எனக் கூற சுப்ரமணியபுரம் படத்திற்கு எப்போதுமே ஒரு இடம் உண்டு. அந்த படம் வெளிவந்து தற்போது வரை 9 வருடங்கள் ஆகிவிட்டது. அந்த படத்தில் முக்கிய கதா பத்திரத்தில் கதையின் போக்கை கூறுபவராக நடித்தவர் தான் மாறி. இந்த படத்தில் இவருடைய கதைப் பெயர் ‘டும்கான்’.
maari படத்தைப் பற்றி பேச ஆரம்பித்ததும், அவர் எப்படி அந்த வாய்ப்பு கிடைத்தது என்று கூறுகிறார்,
‘வழக்கம் போல டீ கடைக்கு நாளு பேர் வந்தாங்க, வந்து என்ன தம்பி பன்றனு கேட்டங்க, அதுக்கு நான் செல்லூர்ல இருக்க மைக் செட்டு கடைல வேல பாக்றேன்னு கொஞ்சொம் எகத்தாலமா சொன்னென்’ அதுக்கு அவங்க, இல்லப்பா ஒரு படத்துல நடிக்க ஆள் தேடிகிட்டு இருக்கோம் நீ நடிக்க வரயா? அப்டின்ன்னு கேட்டாங்க.

பின்னர் அப்படியே பேசிய அவர்நாம் படத்தைப் பார்த்து கை தான் தட்டிக் கொண்டிருதோம், ஆனால் தற்போது நம்மை படத்தில் நடிக்க அழைக்கிறார்கள் என வியந்து போய் அந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். அந்த படம் தான் சுப்ரமணியபுரம்.பின்னர் அவரை பல்வேறு கோணங்களில் புகைப்படம் எடுத்து சென்ற படக்குழுவினர், சில நாட்கள் கழித்து தொலைபேசியில் அழைத்து மாறியை நடிக்க அழைத்துள்ளனர்.

முதலில் திண்டுக்கல்லில் படப்பிடிப்பு துவங்கிய போது ‘நமக்கு சிறு கதா பாத்திரமாகத் தான் இருக்கும்’ முடிந்தவுடன் கிளம்பிவிடுவோம் என்று நடித்துக்கொடுத்திருக்கிறார்.

அப்போது ஒரு பெட்டி கடைப் பக்கத்தில் சண்டைக் காட்சி படமாக தயாரகி வந்துள்ளது, அந்த காட்சியில் ,
‘நான் அப்புறம் ஜெய் அண்ணன் அப்புறம் சசிகுமார் அண்ணன் அப்பிடி மூனு பேர் இருந்தோம், அந்த காட்சில சசிகுமார் அண்ணன் கேட்டாரு, என்னடா நம்ம மூனு பேர் தான் இருக்கோம் ஒரு 20 பேர் வருவாங்க சமளிச்சிரளாமானு கேட்டாரு, நான் உடனே, விடுனே அடிச்சி தூள் கெளப்பிரளாம்னு சொன்னென்’ என்று தன் படப்பிடிப்பு தளத்தை நினைவு கூறுகிறார்.

மேலும், அந்த படத்தில் வரும் ‘ உன்ன நம்பி ஒத்த பீடி கொடுப்பாங்களா’ என்ற பிரபலமான வசனத்தையும் நினைவு கூறுகிறார் டும்கான்.

பொதுவாக வீட்டுத் தெருவில் பிரச்சனை வரும் போது கோவம் வந்து ‘இந்த கால வச்சு நானே சம்பாரிக்கனும்னு நெனக்கிறேன் உங்களுக்கு என்னடா கொற, எனக்கெல்லாம் கால் நல்லா இருந்தா உங்கள எல்லாம் உக்கார வசு சோரு போற்றுப்பேன்’ அப்டின்னு திட்டிருவேன்
என கலகலவென பேசுகிறார் மாறி என்ற டும்கான்.

அவர் படபிடிப்பு தளங்களில் சசி குமாரிடம் ஜாலியாக பேசியதெல்லாம் படத்தில் வந்திருப்பதாக உற்சாகமாக கூறுகிறார் டும்கான்.

‘சுப்ரமணியபுரம் படம் வெளிவந்த பின் படத்தில் சில காட்சிகளில் தான் வருவேன் என, நினைத்தேன் ஆனால், படத்தின் க்ளைமேக்ஸ் சீனில் என்னைத்தான் ஹூரோ போல் காடியிருப்பார் அண்ணன் சமுத்திரகனி.என்று கூறுகிறார் மாறி.படத்தில் வரும் காட்சிகளில் இதை மட்டும் செய் மாறி நீ எனக் கூறி என்னை நடிக்க வைத்தனர். ஆனால், படத்தில் பார்க்கும் போது காட்சிகள் அற்புதமாக வந்திருந்தது. அதனைக் கண்டு நான் மிரண்டு போனேன்.

அதற்க்கு சசிகுமார் அண்ணனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் பெயரைத்தான் பச்சையாக குத்தியுள்ளேன்.
எனக் நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் ‘டும்கான் மாறி’