அதை விற்று வரும் பணத்தில் அரசாங்கம் செயல்படுவது கேவலம் – மாவீரன் பிள்ளை விழாவில் பேரரசு ஆவேசம்.

0
429
- Advertisement -

வீரப்பனின் மகள் விஜயலட்சிமி கதாநாயகியாக தற்போது நடித்துள்ள படம் “மாவீரன் பிள்ளை”. இப்படத்தை கே.என்.ஆர் ராஜா தயாரித்து கதாநாயகனாக நடிக்கவும் செய்திருக்கிறார். மேலும் இப்படத்தில் நடிகர் ராதாரவி தெருக்கூத்து கலைஞராக நடிக்கிறார். அதோடு இப்படத்திற்கு மஞ்சுநாத் ஒளிப்பதிவு செய்ய ரவிவர்மா இசையமைத்துள்ளார். இந்நிலையில் தான் இப்படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அணைத்து மக்கள் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா, இயக்குனர் பேரரசு, கூல் சுரேஷ் போன்றவர்கள் கலந்து கொண்டனர்.

-விளம்பரம்-

இந்த நிலையில் இயக்குனர் பேரரசு இந்த படத்தின் இசை வெளியிட்டு விழாவில் படத்தை பற்றி தன்னுடைய கருத்துக்களை தெரிவித்தார். அவர் கூறியதாவது “படத்தில் கதாநாயகன், கதாநாயகி, இயக்குனர் யார் என்று பார்த்து படத்தினை முடிவு செய்ய வேண்டாம். அந்த படம் கூறும் கருத்தை பாருங்கள். நம்முடைய ஊரில் முதல்வர் மகன் நடிக்கலாம், வீரப்பனின் மகளும் நடிக்கலாம். அப்படியிருக்கும் நிலையில் வீரப்பனின் மகள் விஜயலட்சிமி தற்போது சினிமாவிற்கு வந்துள்ளார் அவரை ஆதரிப்போம் என்றார்.

- Advertisement -

பிரபு தேவாவை விட நன்றாக ஆடுகின்றனர் :

மேலும் பேசிய பேரரசு தெருக்கூத்து அழிந்து கொண்டே வருகிறது என கூறுகின்றனர். ஆனால் மதுக்கடைகள் முன்னால் குடித்துவிட்டு ஆடுபவர்கள் இருக்கின்றனர். அவர்கள் பிரபு தேவா போன்றவர்களை விட நன்றாக ஆடுகின்றனர். பள்ளிகள் மற்றும் கல்லூரி மாணவிகள் மது அருந்தும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மதுவிலக்கு என்று கூறிவிட்டு மதுவை கொடுத்து ஓட்டுபோட சொல்கின்றனர். இந்த படத்தில் வரும் சாராயம் அபாயம் என்ற பாடலை நாம் மதுக்கடைகள் முன்னரே ஒலிக்கவிட்டு பிரச்சாரம் செய்யலாம்.

கஞ்சா கடைகள் வரும் :

மதுக்கடைகளை முடி மதுவிலக்கு அமல் படுத்துவதாக கூறினால் ஒட்டு போடமாட்டார்கள் என்ற பயம் அவர்களுக்கு. எல்லா இடங்களிலும் அரசியல் வாதிகள் பேசும் போது மற்ற அணைத்து போதை பொருட்களை பற்றியும் பேசுகின்றனர், ஆனால் மதுவை பற்றி யாரும் பேசுவதில்லை. மதுவை விற்கலாம் என்றால் இன்னும் வரும் காலங்களில் டாஸ்மார் கடைகளை போல கஞ்சா விற்கும் கடைகளையும் ஆரம்பித்தால் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றுமில்லை.

-விளம்பரம்-

ஓசி பஸ் தேவையில்லை :

ஆன்லைன் விளையாட்டான ரம்மியால் சில இடங்களில் யாரோ ஒருவர் இறக்கிறார். ஆனால் மதுவால் தினமும் பலர் இறக்கின்றனர்.ஆன்லைன் ரம்மியை ஒளிப்பதற்கு சட்டசபையில் குரல் கொடுத்த இவர்கள் ஏன் மதுவை ஒழிக்க குரல் கொடுக்கவில்லை. சாராயம் விற்கும் பணத்தில் அரசாங்கம் செயல்படுவது கேவலம். பெண்களுக்கு ஓசி புஸ்ஸும் தேவையில்லை, ஆயிரம் ரூபாயும் தேவையில்லை.

சமுதாயத்திற்க்கான படம் :

நீட் தேர்வை நீங்கள் ஒழிக்கின்ற வரையில் மாணவர்கள் படிக்க வேண்டும். ஏழை மாணவர்கள் நீட் படிக்க நீங்கள் ஏன் பயிற்சி அளிக்கக்கூடாது. மது விற்ற பணத்தில் எவற்றையும் எங்களுக்கு செய்யவேண்டும். ஆனால் பாவத்தை எங்கள் தலையில் கட்டாதீர்கள். கேளிக்கை வரி என்பது தற்போது கேலிக்கூத்து வாரியாக மாறிவிடாது என்றும், இந்த படம் சமுதாயத்திற்காக எடுக்கப்பட்டது என்று தெரிவித்தார் “மாவீரன் பிள்ளை” படத்தின் இசை வெளியிட்டு விழாவில் பேசிய இயக்குனர் பேரரசு.

Advertisement