‘சிந்திக்க வேண்டிய ஒன்று’ – கிறீன் டீயை பற்றி நீயா நானாவில் புட்டு புட்டு வைத்த மருத்துவரின் வீடியோவை பகிர்ந்த மாதவன்.

0
844
madhavan
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் வாரா வாரம் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சி ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சயமான மற்றும் பிடித்தமான நிகழ்ச்சி என்று தான் சொல்ல வேண்டும். பல ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு மக்கள் பிரச்சினைகள் துவங்கி சர்வதேச பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் விவாத நடுவராக கோபிநாத் செயல்பட்டு வருகிறார்.

-விளம்பரம்-

இவருடைய சரளமான தமிழ் பேச்சும், தெளிவான உச்சரிப்பும், கனத்த குரலில் பேசுவது தான் இவரது ப்ளஸ் பாயிண்ட். 2006 ஆம் ஆண்டு முதல் கோபிநாத் அவர்கள் “நீயா நானா” என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றத் தொடங்கினார். இந்த நிகழ்ச்சி மூலம் இவருக்கு கிடைத்த பிரபல தான் இவருக்கு நீயா நானா கோபி என்ற பெயரும் கிடைத்தது. இந்த நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்ட பல்வேறு தலைப்புகள் சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டிங்கில் வந்திருக்கிறது.

- Advertisement -

நீயா நானா நிகழ்ச்சி குறித்த வீடியோ:

அந்த வகையில் தற்போது நீயா நானா நிகழ்ச்சி குறித்த வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இந்நிலையில் நடிகர் மாதவன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நீயா நானா நிகழ்ச்சியில் வந்த ஒரு காட்சி வீடியோவை மட்டும் பகிர்ந்திருக்கிறார். பகிர்ந்து அதில் அவர் சில கருத்துக்களை சொல்லி இருக்கிறார். அப்படி என்ன மாதவன் அந்த வீடியோவில் பார்த்தார் என்றால், இந்த நிகழ்ச்சியில் நவீன ஆரோக்கிய உணவு முறையை பின்பற்றுவார்கள் VS விமர்சிப்பவர்கள் என்ற தலைப்பில் பேசி இருக்கிறார்கள்.

ginger tea benefits: Should you drink ginger tea everyday?

டாக்டர் அருண்குமார் கூறியது:

இந்த நிகழ்ச்சியில் டாக்டர் அருண்குமார் பேசியிருக்கிறார். அப்போது டாக்டர் அருண் கூறியிருப்பது, எவ்வளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருக்கிறது யாராவது கூறுங்கள் என்று டாக்டர் கூறியிருக்கிறார். அதற்கு பிறகு போட்டியாளர்கள் மெசர்மென்ட் எல்லாம் தெரியாது என்று கூறினார்கள். கிரீன் டீயில் அதிகமாக? இல்லை காபியில் அதிகமா? என்று டாக்டர் அருண் கேட்கிறார். அதற்கு காபியை விட கிரீன் டீயில் அதிகம் இருக்கு என்று சொல்ல உடனே டாக்டர் அருண்குமார் இல்லை என்று டோட்டல் அண்டிஆக்சிடன்ட் பட்டியல் சொல்கிறார்.

-விளம்பரம்-

நீயா நானா டாக்டர் சொன்ன தகவல் :


க்ரீன் டீயில்- 1.5 மில்லி
காபி–2 மடங்கு
இஞ்சி- 20 மடங்கு
புதினா இலை- 115 மடங்கு
நெல்லிக்காய்- 250 மடங்கு கிரீன் டீயை விட அதிகம் என்று கூறியிருக்கிறார்.

மாதவன் போட்ட ட்வீட் :

இப்படி இவர் பேசிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது .இதற்கு தான் நடிகர் மாதவன் ‘சிந்திக்க வேண்டிய ஒன்று என்று பதிவிட்டிருக்கிறார். தற்போது மாதவனின் டீவ்ட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சாக்லேட் பாயாக திகழ்பவர் மாதவன். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் எழுத்தாளர், படத்தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகம் கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், இதே மாதவம் சமந்தாவுடன் சேர்ந்து டீ விளம்பரம் ஒன்றிலும் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement