நயன்தாரா, கீர்த்தி என்று பல்வேறு நடிகைகளின் வசனத்தை டிக் டாக் செய்த ரம்யா.

0
849
Ramya
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி நடிகையாக கலக்கி கொண்டு இருக்கிறார் விஜே ரம்யா. சின்னத்திரையில் பரிட்சயமான தொகுப்பாளினிகளில் ரம்யாவும் ஒருவர். இவர் முதன் முதலாக விஜேவாக தான் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். பின் இவர் டீவி நிகழ்ச்சிகள் முதல் சினிமா வரை என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார். அதற்கு பிறகு ரம்யா அவர்கள் கடந்த 2007 ஆம் ஆண்டு ஜோதிகா நடிப்பில் வெளியான மொழி திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானார். அதன் பின்னர் ஓ காதல் கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, ஆடை போன்ற பல படங்களில் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-

இந்நிலையில் நடிகையுமான ரம்யா அவர்கள் மீண்டும் தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கி உள்ளார்கள். வீட்டுக்குள் இருப்பது போரடிக்காமல் இருப்பதற்காக உடற்பயிற்சி செய்வது, வீட்டு வேலை, புத்தகம் படிப்பது என பல்வேறு வேலைகளை செய்து அதை வீடியோக்களாக சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்கள்.

- Advertisement -

அந்த வகையில் நடிகை ரம்யா அவர்கள் தன்னால் முடிந்த வரை கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு வீடியோவையும், உடற்பயிற்சி செய்வது, வீட்டு வேலைகள் செய்வது என பல வீடியோக்களை அடிக்கடி சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார். இதனாலேயே சமூக வலைதளங்களில் இவருடைய வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.

@actorramya

Well this seems to be an easy way to stop stalking ?. #Aadukalam #KPKarupu

♬ original sound – Happy1cj

தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவை வைரலாகி வருகிறது. மேலும், நடிகை ரம்யா அவர்கள் எப்போதும் தன்னுடைய ஃபிட்னஸ் விஷயத்தில் கண்டிப்பாக இருப்பார். நடிகை ரம்யா கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டும், தன்னுடைய உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனம் செலுத்தியும் வருகிறார்.இந்த நிலையில் தற்போது நடிகை ரம்யா அவர்கள் அதில் தினமும் அவர் செய்து கொண்டிருக்கும் செயல்களை குறித்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

சமீபத்தில் தான் ரம்யா, டிக் டாக்கில் இணைந்தார். அதில் தன்னுடைய வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். சமூக வலைதளத்தில்  உடற்பயிற்சி வீடியோகளை பதிவிட்டு வந்த ரம்யா தற்போது டிக் டாக் அதனை தவிர்த்து ஆடல் பாடல் என அசத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் தானா சேர்ந்த கூட்டம் பட வசனத்தை அரை ட்ரையர் அணிந்து டிக் டாக் செய்துள்ளார் ரம்யா.

Advertisement