விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் காவிரி, அம்மு தன்னிடம் சரியாக பேசாமல் இருந்ததை நினைத்து ரொம்பவே வருத்தப்பட்டு கொண்டிருந்தார். அப்போது வந்த கங்கா, சாரதா இருவரும் விசாரித்தார்கள். காவிரி, அங்கு வீட்டில் ஏதாவது பிரச்சனை இருக்குமோ? அம்முவின் அப்பாவும் கோவமாக பேசுகிறார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ரொம்ப கவலையாக இருக்கிறது என்றார். சாரதா, அதெல்லாம் ஒன்றும் இல்லை பார்த்துக்கொள்ளலாம் நீ எதையும் யோசிக்காதே என்று சமாதானம் செய்தார்கள். மறுநாள் காலையில் சாரதா- கங்கா இருவருமே விஜயின் வீட்டிற்கு சென்றிருந்தார்கள்.

அப்போது யாழினி-அம்மு இருவரும் பேசிக்கொண்ட விஷயத்தை எல்லாம் சாரதா சொன்னார். விஜய், அம்முவிடம் எல்லா உண்மையும் சொல்லிவிட்டேன். ஆனால், அவளிடம் அதைப் பற்றி எதுவும் கேட்டுக்காதீர்கள் என்றார். அதற்குப்பின் சாரதா- கங்கா இருவரும் அம்முவை பார்த்து பேசி இருந்தார்கள். அம்மு காவிரியை பற்றி கேட்டுக் கொண்டிருந்தார். சாரதா, சீக்கிரத்திலேயே நாம் எல்லோரும் சேர்ந்து இருப்போம் கவலைப்படாதே என்று அவருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு பள்ளிக்கூடத்திற்கு அம்முவை தயார் செய்தார். இன்னொரு பக்கம் காவேரி, வீட்டில் அம்மாவும் அக்காவும் இல்லாததை பற்றி நர்மதாவிடம் கேட்டார்.
மகாநதி:
அம்மு பள்ளிக்கூடத்திற்கு அழகாக தயாராகி வந்தார். விஜய், காவிரியிடம் எந்த உண்மையையும் சொல்லக்கூடாது என்று அம்மு சொல்லக்கூடாது என்றார். அம்மு சரி என்றார். பின் பள்ளிக்கூடத்திற்கு வந்த அம்முவை பார்த்து காவிரி ரொம்ப எமோஷனலாக விசாரித்தார். அம்முவும் ரொம்ப சந்தோஷமாக தன்னுடைய அம்மாவிடம் பேசி இருந்தார். ஆனால், உண்மையை எதுவுமே சொல்லவில்லை. பின் கிளாஸ் ரூமில் அம்மு, என்னுடைய அம்மா இறக்கவில்லை உயிருடன் தான் இருக்கிறார் என்று தன்னுடைய நண்பர்களுடன் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால், தன்னுடைய அம்மா காவிரி தான் என்று உண்மையை சொல்லவில்லை.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் காவேரி- அம்மு தன்னுடைய அம்மா காவிரியை ரசித்து பார்த்து சந்தோசப்படுகிறார். அதுமட்டுமில்லாமல் சாப்பாட்டை ஊட்டி விட சொல்ல, காவிரியும் ஊட்டி விடுகிறார். அதற்குப்பின் யாழினி, அம்மு இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது யாழினி, உன் அம்மா இறந்து விட்டதாக சொல்லிவிட்டு, ஏன் இப்போது உயிருடன் இருக்கிறாய்? என்கிறார். அதற்கு அம்மு, என்னுடைய அம்மா உயிருடன் தான் இருக்கிறார். உன்னுடைய காவிரி சித்தியும் என்னுடைய அம்மாவும் ஒன்றுதான் என்று நடந்த உண்மை சொல்கிறார். யாழினி, நான் இதை சித்தி இடம் சொல்லப்போகிறேன் என்கிறார்.

சீரியல் ட்ராக்:
உடனே யாழினி கையை பிடித்து உண்மையை சொல்லக்கூடாது என்று அம்மு தடுக்கிறார். கோபத்தில் யாழினி கையை உதறும் போது கீழே தவறி விழுந்து விடுகிறார். அப்போது யாழினிக்கு அடிபட்டு விடுகிறது. அப்போது வந்து காவிரி,யாழினிக்கு முதலுதவி செய்கிறார். இதனால் யாழினி, அம்மு மீது கோபமாக இருக்கிறார். அம்மு, மன்னிப்பு கேட்டுவிட்டு உண்மை தெரிந்தால் அம்மாவிற்கு உடம்பு சரியில்லாமல் போகும் தயவு செய்து சொல்லாதே என்று யாழினியிடம் சத்தியம் வாங்கிக் கொள்கிறார். இன்னொரு பக்கம் சாரதா, அம்முவிற்கு காவிரி தான் தன் அம்மா என்ற உண்மை தெரிந்த விஷயத்தை சொல்கிறார். இதைக்கேட்டு நிவின், யமுனா எல்லோரும் ஷாக் ஆகிறார்கள். எப்படியாவது விஜய் காவிரியை சேர்த்து வைக்க வேண்டும் என்றெல்லாம் பேசுகிறார்கள்.






