விபத்தில் சிக்கிய பிரபல நடிகை ! தலைகீழாக கவிழ்ந்த கார்! 15 நிமிடம் மயக்கம்! அதிர்ச்சி தகவல்!

0
1040
Megha-Mathew

மலையாள நடிகை மேகா மேத்தியூஸ், சமீபத்தில் ஒரு மோசமான கார் விபத்தில் சிக்கியுள்ளார். இவர் மலையாளத்தில் 2016 ஆண்டு வெளியான “ஆனந்தம்” என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Megha-Mathew

மலையாள நடிகையான இவர் , ஏற்கனவே ஒரு சில மலையாள படங்களில் நடித்துள்ளார். தற்போது மலையாள சூப்பர் மோகன் லால் நடித்து வரும் ‘நீரளி’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தனது சகோதரி வீட்டில் நடக்கும் நிச்சயதார்த்த நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றுள்ளார்.

இதற்காக கொச்சியில் இருந்து கேரளாவிற்கு காரில் பயணம் செய்துள்ளார் மேகா. இவர் பயணம் செய்து கொண்டிருக்கும் போது எதிரே வேகமாக வந்த கார் ஒன்று இவரின் கார் மீது பலமாக மோதியுள்ளது. இதனால் அவரது கார் தலைகீழாக கவிழ்ந்தது. இந்த விபத்தில் நடிகை மேகா 15 நிமிடங்களுக்கு மேலாக காரின் உள் மயக்கத்தில் இருந்துள்ளார்.

Megha-Mathew

அதிர்ஷ்டவசமாக அவர் காரில் இருந்த ஏர் பேக் மூலம் இந்த விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய மேகாவை, ஒரு புகைப்பட கலைஞர் ஒருவர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துளளார். அதிர்ஷ்டவசமாக அவருக்கும் பெரும் காயம் ஏற்படாமல் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தில் அவர் சென்ற கார் மட்டும் முழுவதுமாக சேதமடைந்துள்ளது.