கணவருக்கு கொடுத்த முதல் பரிசால் மொக்கை வாங்கிய மணிமேகலை ? அப்படி என்ன பரிசு ?

0
10259
manigegalai
- Advertisement -

பிரபல சன் மியூசிக் தொகுப்பாளினி மணிமேகலை நடன இயக்குனரான காதர் ஹுசைனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
தனது காதலுக்கு வீட்டில் சம்மதம் தெரிவிகத்ததால் தற்போது தனது காதல் கணவருடன் தனியாக வசித்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு சிலம்பம் போன்ற கலைகளை கற்றுவருகிறார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் தனது காதலனுக்கு தான் அளித்த முதல் பரிசு சொதப்பிவிட்டது என்று கூறியுள்ளார் மணி மேகலை. தனது காதலருக்கு தரும் முதல் பரிசு மிகவும் சிறந்ததாக இருக்க வேண்டும் என்று எண்ணினேன்.

- Advertisement -

அவர் ஐ போன் பயன்படுத்துவதால், தேடி தேடி கடைசியில் ஆப்பிள் ஸ்மார்ட்வாட்ச் ஒன்றை வாங்கினேன். அதனை நான் அவருக்கு ஆசையாக பரிசளித்தேன். ஆனால் அவர் தனக்கு வாட்ச் கட்டும் பழக்கமே இல்லை என்று, தனக்கு பல்ப் கொடுத்து விட்டார் என தெரிவித்தார்.