கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிப்பில் வெளியான படம் ‘செக்கச்சிவந்த வானம்’. மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் லைகா இணைந்து இப்படத்தை தயாரித்தது.
விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. தமிழ் சினிமாவில் நிஜமான மல்டி ஸ்டாரர் படம் என்று கொண்டாடினார்கள். இயக்குனர் மணிரத்னம்
தற்போது தனது நீண்ட நாள் கனவான ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இப்போது மீண்டும் கையில் எடுத்திருக்கிறார்.
இதையும் படியுங்க : செக்க சிவந்த வானம் இந்த படத்தின் காப்பியா..? ஆதாரத்துடன் வெளியான புகைப்படம்.! மணிரத்னம் சார் என்ன இது..?
கடந்த முறை விஜய் மற்றும் மகேஷ் பாபு ஆகியோரை வைத்து முதலில் பேச்சுவார்த்தை தொடங்கினார். ஆனால், எதிர்பார்த்ததை விட பட்ஜெட் அதிகமானதால் அந்த முயற்சியைக் கைவிட்டார். தற்போது வரை இந்த படத்தில் விக்ரம்,ஜெயம் ரவி மற்றும் சிம்பு மட்டும் கமிட் செய்யப்ட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியானது.
சமீபத்தில் வந்த தகவலின்படி இந்த படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும் மற்றும் அவரது மருமகள் ஐஸ்வர்யா ராயும் படத்தில் கமிட் செய்ய உள்ளனர் என்று கூறப்படுகிறது. இதை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு பொங்கல் பண்டிகைக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது. ஐஸ்வர்யா ராய், மணிரத்னம் இயக்கிய இருவர், இராவணன் ஆகிய இரண்டு படங்களில் ஏற்கனவே நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.