சிங்கப்பெண்ணே பாடலை தொடர்ந்து இணையத்தில் லீக்காண விஜய் பாடிய ‘வெறித்தனம்’ பாடல்.!

0
4070
Bigil

இளைய தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் ‘பிகில்’ படத்தில் நடித்து வருகிறார். ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் நயன்தாராவா விஜய்யின் ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் மும்மரமாக நடந்து வருகிறது.

சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. மேலும், பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தில் நடிகர் விஜய் அப்பா மகன் என்று இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

இதையும் பாருங்க : சர்ச்சையை ஏற்படுத்திய ஆடை பட புதிய போஸ்டர்.! இதில் கூடவா ஆடை அணிவாங்க.! 

- Advertisement -

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மாதம் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் நடிகர் விஜய் மைக்கேல் என்ற மகன் விஜயும் ராயப்பன் என்ற அப்பா கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் என்று ஏற்கனவே தகவல் வெளியானது. மேலும், இந்த படத்தில் விஜய் ஒரு பாடலையும் பாடியுள்ளார் என்று அறிவிப்பு வெளியானது.

இந்த நிலையில் விஜய் பாடியுள்ள ‘வெறித்தனம் பாடல் தஹ்ரபோது சமூக வலைதளத்தில் லீக் ஆகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தில் ஏ ஆர் ரஹ்மான் பாடிய ‘சிங்கப்பெண்ணே’ பாடல் சமூக வலைதளத்தில் லீக் ஆகி படு வைரலாக பரவி வந்தது. இந்த நிலையில் விஜய் பாடிய பாடலும் லீக் ஆனதால் படக் குழுவினர் மிகுந்த குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.

படத்தின் அப்டேட்டுகளை பொத்தி பொத்தி பார்த்து வந்தது ஏ ஜி எஸ் நிறுவனம். ஆனால், தற்போது இரண்டு பாடலே இணையத்தில் லீக் ஆனதால் பிகில் படக்குழுவினர் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இந்த பாடல்கள் எப்படி உள்ளது என்று உங்களது கருத்துக்களை கமெண்டில் தெரிவியுங்கள்.

Advertisement