வீட்டிலேயே தனிமைபடுத்திக்கொண்ட மகன். கண்ணாடி வழியே பேசும் சுஹாசினி. காரணம் ஏன் தெரியுமா ?

0
18671
manirathnam
- Advertisement -

கடந்த இரண்டு மாதங்களாக இந்த கரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் தற்போது போரை விட பயங்கர பீதியை ஏற்படுத்தி இருப்பது இந்த கரோனா வைரஸ் தான். சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வுஹான் நகரில் தான் இந்த கரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது. தற்போது உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் இந்த கரோனா வைரஸ் தொற்று பரவி உள்ளது. இந்த கரோனா வைரஸினால் பல்லாயிரக் கணக்கானோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Image result for manirathnam son

- Advertisement -

பல்வேறு நாடுகளை பாதித்த இந்த கொரோனா வைரஸின் தாக்கம் தற்போது இந்தியாவையும் கொஞ்சம் கொஞ்சமாக பாதித்து வருகிறது. கொரோனா பாதிப்பை குறைக்கும் விதத்தில் மோடி அறிவித்த இந்த அறிவிப்பிற்கு நாடு முழுவதும் பல்வேறு ஆதரவுகள் குவிந்து வந்தது. மேலும், பல்வேறு பிரபலங்களும், விளையாட்டு வீரர்களும், நடிகர் நடிகைகளும் மோடியின் இந்த முயற்சிக்கு பாராட்டு தெரிவித்து தங்களது ஆதரவை கண்டிப்பாக வழங்குவோம் ரசிகர்களும் இதற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று சமூக வலைதளத்தில் வீடியோ மூலமாக கேட்டுக்கொண்டனர்.

இதையும் பாருங்க : கொரோனா அச்சுறுத்தல் – கூட்டம் இல்லாமல், விஜயகாந்த் வீட்டிலேயே நடந்த திருமணம்

-விளம்பரம்-

இந்தியாவில் கொரோனா தோற்று பரவ காரணம் வெளிநாட்டில் இருந்து வரும் இந்தியர்களால் தான் என்று கூறப்படுகிறது. மேலும், வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்பும் இந்தியர்கள் குறைந்தது 14 நாட்களுக்காவது தன்னை தானே தனிமைபடுத்திக்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் பிரபல இயக்குனர் மணிரத்னத்தின் மனைவி சுஹாசினி, கொரோனா அச்சத்தால் தனது மகன் சொந்த வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளான் என்று வீடியோ ஒன்றை சமூக வளைத்ததில் வெளியிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில் பேசியுள்ள சுஹாசினி,  கண்ணாடிக்கு 10 அடி தள்ளி என் மகன் நந்தனிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். அதற்கு என்ன காரணம் என்று உங்கள் அனைவருக்கும் தெரியும். லண்டனிலிருந்து 18-ம் தேதி சென்னை வந்தார். கரோனா வைரஸ் பரவக் கூடாது என்று, வந்ததிலிருந்து இந்த அறைக்குள்தான் இருக்கிறார் என்று கூறும் சுஹாசினி, எத்தனை நாட்கள் இந்த அறைக்குள் இருக்கிறாய் என்று தனது மகனை கேட்கிறார். தற்கு பதில் அளிக்கும் சுஹாசினியின் மகன் நந்தன், நான் புதன்கிழமை சென்னை வந்தேன். இந்த ரூம், பக்கத்திலிருக்கும் பெட்ரூம் இரண்டிலும்தான் இருக்கிறேன். கொஞ்சம் போரடிக்கத்தான் செய்கிறது. எவ்வளவு போராடித்தாலும் வீட்டிற்குள் இருப்பது சின்ன விஷயம்தான். வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் 2 வாரம் யாருடன் பழகாமல் தூரத்திலேயே இருந்து, அதாவது தனிமையில் இருக்க வேண்டும்.

இதையும் பாருங்க : கொரோனா பாதிப்பை தடுக்க உதவும் உணவுகள். சத்யராஜ் மகள் எப்படி இதெல்லாம் சொல்றார்னு கேக்குறீங்களா?

யார்கிட்டயும் போகாமல் 5-வது நாளாக இருக்கிறேன். இன்னும் 9 நாட்கள் இருக்கிறது. சாப்பாடு கூட அந்த அறையில் வைத்துவிட்டு, வைத்தவர்கள் சுத்தமாகக் கையைக் கழுவிவிடுவார்கள். நானும் சுத்தமாகக் கையைக் கழுவிவிட்டுத்தான் சாப்பிடுவேன். தனிமையாக இருப்பது சின்ன கஷ்டம்தான். ஆனால், எல்லாருமே எடுத்துத்தான் ஆக வேண்டும் என்று கூறுகிறார். இந்த வீடியோவை நடிகை குஷ்பூ தனது சமூக வளைத்ததில் பதிவிட்டு, பொறுப்புடைய மக்கள் இதைத்தான் செய்வார்கள் சுகாசினி மற்றும் நந்தன் இருவருக்கும் ஒரு மிகப்பெரிய பாராட்டு அவர்களிடமிருந்து நாம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். உனக்காக என்னுடைய அரவணைப்பு காத்துக்கொண்டு இருக்கிறது நந்தன். உன் நாட்கள் இனிமையாக அமைய வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement