இது ஒன்றும் ஐந்து நட்சத்திர விடுதி அல்ல- கொரோனா பாதிக்கப்பட பாடகிக்கு டோஸ் விட்டுள்ள மருத்துவர்.

0
4553
Kanika
- Advertisement -

கடந்த இரண்டு மாதங்களாக இந்த கரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் தற்போது போரை விட பயங்கர பீதியை ஏற்படுத்தி இருப்பது இந்த கரோனா வைரஸ் தான். நாடுமுழுவதும் இந்த கொரோனா வைரஸால் 3.5 லட்சத்திற்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் , இதுவரை இந்த கொடிய வைரஸால் 13 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை 370க்கும் மேற்பட்டோர் இந்த கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் இதுவரை 7 பேர் உயிரிழந்து உள்ளனர். அதில் இரண்டு பேர் இன்று தான் உயிரிழந்தனர்.

-விளம்பரம்-
Image result for kanika kapoor

- Advertisement -

நாட்டையே உலுக்கி வரும் இந்த வைரஸ் பீதியால் தற்போது இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்திவாவில் பல பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பாலிவுட் பாடகியான கனிகா கபூர் என்பவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கனிகா மீது அலட்சியமாக செயல்பட்டதாக வழக்கு பதிவு செய்திருக்கிறது லக்னோ காவல்துறை. கொரோனா வைரஸ் பாதிப்பை மறைத்து பிரபலங்களுக்கு விருந்தும் கொடுத்துள்ளார். இதனால் சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்கள் பீதியடைந்துள்ளது.

கொரோனா பாதிப்புடைய பாலிவுட் பாடகி கனிகா கபூர் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மருத்துவமனையில் தனக்கு போதிய வசதிகள் செய்து தரபடவில்லை என்று கனிகா கூறியுள்ளார். இதுகுறித்து டைம்ஸ் ஆப் இந்தியாவில் பேசியுள்ள அவர், காலை 11 மணிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன் ஒரு சிறிய பாட்டிலில் தண்ணீர் கொடுத்தார்கள். எனக்கு சாப்பிட ஏதாவது கொடுங்கள் என்று மருத்துவமனை ஊழியர்களிடம் கேட்டேன். அவர்கள் எனக்கு ஈக்கள் மொய்த்த இரண்டு வாழைப்பழத்தையும் ஒரு ஆரஞ்சையும் கொடுத்தார்கள். நான் மிகவும் பசியாக இருந்தேன், எனக்கு மருந்துகளும் கொடுக்கப்படவில்லை

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is WhatsApp_Image_2020-03-20_at_1_0-x1280.jpeg

எனக்கு ஜூரம் இருப்பதாக கூறினேன், ஆனால் யாரும் என்னை கண்டுக்கொள்ளவில்லை. நான் கொண்டு வந்த உணவைக் கூட கொண்டு சென்றுவிட்டார்கள். என்னால் எதையும் சாப்பிட முடியவில்லை, சில உணவுகள் எனக்கு அலர்ஜி தரக் கூடியவை. எனக்கே பசி தாகம் எல்லாம் இருக்கிறது, இங்கு இருப்பது கொடூரமாக இருக்கிறது. டாக்டரிடம் நான் அனுமதிக்கப்பட்டிருக்கும் அறையை சுத்தம் செய்யுமாறு கூறினேன், அதற்கு அவர் இது ஒன்றும் ஐந்து நட்சத்திர விடுதி அல்ல என்றார். என்னை மிரட்டுகிறார்கள் என்று கூறியுள்ளார்.

ஆனால், கனிகா கபூருக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது என்வும். கழிவறையுடன் கூடிய தொலைக்காட்சி வசதியுடைய தனி அறையில் அடைக்கப்பட்டுள்ள கனிகா கபூருக்கு மிகச்சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக லக்னோவின் மருத்துவமனை இயக்குனர் சஞ்சய் காந்தி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இருப்பினும் மருத்துவர்களிடம் கனிகா மருத்துவர்களுக்கு ஒத்துழைக்காமல் அமளியில் ஈடுபடுவதாக மருத்துவமனை நிர்வாகம் புகார் தெரிவித்துள்ளது.

Advertisement