பாரதிராஜா மகன் மனோஜ் இயக்கியுள்ள முதல் திரைப்படம் ‘மார்கழி திங்கள்’ – விமர்சனம் இதோ

0
469
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இயக்குனராக திகழ்ந்த பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தான் மார்கழி திங்கள். இந்த படத்தின் மூலம் தான் இவர் இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார். இதற்கு முன்பு மனோஜ் பாரதிராஜா பல படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் பாரதிராஜா, ரக்ஷனா, ஷியாம் செல்வன், சுசீந்திரன், அப்புகுட்டி, ஜார்ஜ் விஜய், சுப்பிரமணி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்க்கு இளையராஜா இசை அமைத்து இருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குனராக மனோஜ் பாரதிராஜா இயக்கியிருக்கும் மார்கழி திங்கள் படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா?இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் கவிதா, வினோத் இருவரும் ஒன்றாக படிக்கிறார்கள். இவர்கள் இருவருக்கும் இடையில் காதல் ஏற்படுகிறது. இவர்களுடைய காதல் கவிதாவின் தாத்தா பாரதிராஜாவிற்கு தெரிய வருகிறது. அப்போது அவர், கல்லூரி படிப்பை முடிக்கும் வரையில் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளக் கூடாது, பேசிக்கொள்ளவும் கூடாது. அதற்கு பிறகு உங்களுடைய காதல் பற்றி முடிவெடுக்கலாம் என்று சொன்னார்.

- Advertisement -

இதனால் இருவரும் தனித்தனியாக தங்களுடைய படிப்பை படித்தார்கள். இதற்கிடையில் இவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்கள்? இவர்கள் காதலில் கரம் பிடித்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை. மேலும், படத்தில் காதல் கதையை காண்பது போல் ஆவண படுகொலை குறித்து இயக்குனர் சொல்லி இருக்கிறார். படத்தில் நாயகனாக ஷ்யாம் செல்வன் நடித்திருக்கிறார். இருந்தாலும், இவருடைய நடிப்பு பெரிதாக சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை.

சில இடங்களில் இவருடைய நடிப்பு செயற்கை தனமாக இருக்கிறது. கதாநாயகியாக ரக்ஷனா வந்திருக்கிறார். இவர் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். முதல் பாதி முழுக்க காதல் காட்சிகள் தான் நிரம்பி இருக்கிறது. அதை அழகாக கதாநாயகி ரக்ஷனா கொண்டு சென்று இருக்கிறார் என்று சொல்லலாம். இவர்களை அடுத்து சுசீந்திரன், பாரதிராஜா என பலருமே தங்களுக்கு கொடுத்த வேலை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

மேலும், கிராமிய காதல் படமாக இயக்குனர் மனோஜ் கொண்டு சென்றிருக்கிறார். இருந்தாலும், இதை கொஞ்சம் விறுவிறுப்பாக நேர்த்தியாக கொண்டு சென்று இருந்தால் நன்றாக இருக்கும், முதல் பாதி முழு காதல் கதை. விறுவிறுப்பு இல்லாததால் பார்வையாளர்கள் மத்தியில் சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், ஆவண படுகொலை, சாதி குறித்து படத்தில் பேசப்பட்டிருப்பது இன்றைய தலைமுறைக்கு மெசேஜ் சொல்லும் வகையில் இருக்கிறது. அதை ஆழமாக இயக்குனர் கொடுத்திருக்கலாம்.

இளையராஜாவின் இசை படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது. வாஞ்சிநாதனின் ஒளிப்பதிவும் நன்றாக இருக்கிறது. மொத்தத்தில் இயக்குனர் மனோஜ் பாரதிராஜாவின் முயற்சிக்கு ஒரு பாராட்டு. மற்றபடி படத்தில் பெரிதாக சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை.

நிறை:

பாரதிராஜாவின் நடிப்பு

காதல் கிராமிய காதல் கதை

நடிகர்கள் தங்கள் கொடுத்த வேலை சிறப்பாக செய்தார்கள்

இசை ஓகே

ஒளிப்பதிவு ஓகே

ஆவண படுகொலை குறித்த மெசேஜ்

குறை:

கதாநாயகன் தேர்வில் கவனம் செலுத்தி இருக்கலாம்

அழுத்தமற்ற கதை

முதல் பாதி முழுவதும் காதல்

இரண்டாம் பாதி விறுவிறுப்பே இல்லை

இயக்குனர் விறுவிறுப்பியும் சுவாரசியத்தையும் கொண்டு சென்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும்

மொத்தத்தில் மார்கழி திங்கள்- கிராமிய காதல் கதை

Advertisement