13 ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய கடிதம் என்பது – தேவர் மகன் சர்ச்சை குறித்து முதன் முறையாக விளக்கம் தந்த மாரி செல்வராஜ்.

0
2401
Mariselvaraj
- Advertisement -

தேவர் மகன் படம் குறித்து எழுந்து வரும் சர்ச்சைக்கு மாரி செல்வராஜ் கொடுத்திருக்கும் விளக்கம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மாரி செல்வராஜ். இவர் இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். அதன் பின் 2018 ஆம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக மாரி செல்வராஜ் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார்.

-விளம்பரம்-

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்றதோடு மட்டும் இல்லாமல் பல்வேறு விருதுகளையும் பெற்றது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் ‘கர்ணன்’. தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமன்னன் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் மாரி செல்வராஜ். இத்திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலினிற்கு கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். இவர்களை தொடர்ந்து இந்த படத்தில் வைகை புயல் வடிவேலு , பகத் பாசில், லால் போன்ற பல முன்னணி நடிகர்களும் நடித்து வருகிறார்கள்.

- Advertisement -

மாமன்னன் படம்:

இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. மேலும், இந்த படம் ஜூன் 29ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருக்கிறார். இது தான் உதயநிதி ஸ்டாலினின் கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இந்த படத்தின் ஆடியோ லான்ச் விழா நடைபெற்றது. மேலும், விழாவில் மாரி செல்வராஜ், தேவர்மகன் படத்தை பார்த்து தான் பரியேறும் பெருமாள், கர்ணன் படத்தை இயக்கினேன். கமலஹாசனின் தேவர் மகன் படம் ஜாதி பெருமையை அப்பட்டமாக பேசி இருந்தது.

ஆடியோ லான்ச் விழா:

மாமன்னன் உருவாவதற்கும் தேவர் மகன் படம் தான் காரணம். தேவர் மகனில் இருக்கும் இசக்கி தான் மாமன்னன். அந்த இசக்கி மாமன்னனாக மாறினால் எப்படி இருக்கும் என்பது தான் மாமன்னன் படம் என்று கமலஹாசனை வம்பு இழுத்து இருக்கிறார். இப்படி கமலஹாசனின் தேவர்மகன் படத்தை மாரி செல்வராஜ் பேசியது குறித்து கமல் ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் சோசியல் மீடியாவில் மாரி செல்வராஜூக்கு எதிராக மீம்ஸ்களை தெரிக்க விட்டு வருகிறார்கள்.

-விளம்பரம்-

கமலஹாசனின் தேவர்மகன் படம் குறித்து சொன்னது:

இந்த நிலையில் இதற்கு விளக்கம் கொடுத்து பேட்டியில் மாரி செல்வராஜ் கூறியது, அது ரொம்ப எமோஷனலான ஒரு தருணமாக இருந்தது. கமலஹாசன் போன்ற ஒரு ஆளுமை என் படத்தை பார்த்து விட்டார். மேடையில் என் படத்தை பற்றி பேசப் போகிறார். அப்போது நான் அவ்வளவும் எமோஷனலாக இருந்தேன் என்பது அவருக்கே தெரியும். 13 ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய கடிதம் என்பது அன்றைக்கு இருந்த கோபம், மொழி ஆகியவற்றால் எழுதப்பட்டது.

மாரிசெல்வராஜ் விளக்கம் :

அப்போது எனக்கு வாசிப்பு பழக்கம் எல்லாம் கிடையாது. தமிழ் சினிமாவில் மாமன்னன் படத்தை பார்த்த ஒரே ஆள் கமலஹாசன் மட்டும் தான். அந்த படத்தை அவருடன் பார்க்கும் போது நான் எவ்வளவு எமோஷனலாக இருந்தேன் என்பது எனக்கும் அவருக்கு மட்டும் தான் தெரியும். என் படத்தை பார்த்துவிட்டு என்னை அவர் அங்கீகரித்து பாராட்டி இருந்தார். இது என்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய சாதனை. அதோடு என் முன்னாள் அவர் அமர்ந்திருந்தபோது இத்தனை நாட்களாக எனக்குள் இருந்த விஷயத்தை எல்லாம் பேசவில்லை என்றால் வேறு எந்த நாளிலும் பேச முடியாது என்று எனக்கு தோன்றியது.

இதற்கு மேல் என்ன வேண்டும். அதுதான் என்னுடைய வெற்றி என்று கூட சொல்லலாம். அவரிடம் இருந்து எனக்கு கிடைத்த அந்த அன்பையும் அரவணைப்பையும் நான் இழக்க விரும்பவில்லை. அவரும் எனக்கு ஆதரவாக பேசி என் தலையை தடவி கொடுத்து விட்டுச் சென்றார். இதைவிட எனக்கு என்ன வேண்டும். இன்னும் சொல்ல போனால் அப்பாவுக்கும் மகனுக்கும் உண்டான ஒரு கோபம் தான் இது. அப்பாவை சரியாக புரிந்து கொள்ளாமல் கோபத்தில் வீட்டை விட்டு சென்ற பையன் அப்பாவிடம் பேசியது போன்ற ஒரு தருணமாக தான் நான் அதை பார்க்கிறேன் என்று கூறி இருக்கிறார்.

Advertisement