கம்மலை வைத்து இப்படி ஒரு கதை – ‘தண்டட்டி’ எப்படி இருக்கு ? முழு விமர்சனம் இதோ

0
4566
Thandatti
- Advertisement -

இயக்குனர் ராம் சங்கையா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தண்டட்டி. இந்த படம் கிராமத்தின் மண்வளம் மாறாமல் புதிய கதைகளத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் பசுபதி, ரோகினி, விவேக் பிரசன்னா, முகேஷ், தீபா ஷங்கர் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் மற்றும் லட்சுமி குமார் தயாரித்திருக்கிறார்கள். இன்று வெளியாகியிருக்கும் தண்டட்டி படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் தேனி மாவட்டத்தில் உள்ள கிடாரிப்பட்டியில் தங்கப்பொண்ணு என்ற மூதாட்டி வாழ்ந்து வருகிறார். இவர் திடீரென்று ஒரு நாள் காணாமல் போகிறார். அவரைத் தேடுவது தான் படத்தின் கதை. அவரைத் தேடுவது போன்று தான் படத்தின் கதை தொடங்குகிறது. போலீஸ் கதாபாத்திரத்தில் பசுபதி நடித்திருக்கிறார். இவர் அந்த மூதாட்டியை தேடுகிறார். இறுதியில் அந்த மூதாட்டி இறந்த நிலைமையில் கண்டுபிடிக்கிறார்கள்.

- Advertisement -

படத்தின் கதை:

பின் இறுதி சடங்குகள் நடைபெறுகிறது. அப்போது இறந்த தாயின் உடைய காதில் இருக்கும் தண்டட்டியை அவருடைய பிள்ளைகள் கைப்பற்ற நினைக்கிறார்கள். ஆனால், திடீரென்று அந்த தண்டட்டி காணாமல் போகிறது. அந்தத் தண்டட்டி எப்படி காணாமல் போனது? அதை கைப்பற்றியவர்கள் யார்? இதனால் நடக்கும் பிரச்சனைகள் என்ன? மூதாட்டி எப்படி காணாமல் போனார்? அவர் எப்படி இறந்தார்? எப்படி அதை எல்லாம் போலீஸ் பசுபதி சமாளித்தார் என்பதே படத்தின் மீதி கதை.

ரோகினி-பசுபதி கதாபாத்திரம்:

படத்தில் மூதாட்டி கதாபாத்திரத்தில் நடிகை ரோகிணி நடித்திருக்கிறார். தன்னுடைய அனுபவ நடிப்பை சிறப்பாக கொடுத்து இருக்கிறார். சிறுவயது ரோகினி கதாபாத்திரத்தில் அம்மு அபிராமி நடித்திருக்கிறார்.
இவரை அடுத்து கான்ஸ்டபிள் சுப்ரமணி கதாபாத்திரத்தில் பசுபதி நடித்திருக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்திற்கு பிறகு இந்த படத்தில் இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெறுகிறது. படம் முழுக்க இவர் தோளிலேயே தாங்கி செல்கிறார் என்று சொல்லலாம்.

-விளம்பரம்-

படம் குறித்த தகவல்:

அந்த அளவிற்கு இவருடைய கதாபாத்திரம் இருக்கிறது. மேலும், கிடாரிப்பட்டி ஊர் மக்களிடம் மாட்டிக் கொண்டு அவர் தவிக்கும் காட்சிகள் எல்லாம் பார்வையாளர்கள் மத்தியில் ரசிக்க வைத்திருக்கிறது.
நகைச்சுவை பாணியில் தண்டட்டிக்கு பின்னால் இருக்கும் கதையை இயக்குனர் நகைச்சுவை பாணியில் கூறியிருப்பது நன்றாக இருக்கிறது. ஒரு எதார்த்தமான கிராமத்தின் மண்வளம் மாறாமல் கதையை இயக்குனர் கொடுத்திருக்கிறார்.

முழுக்க முழுக்க இந்த படம் மக்களின் பொழுது போக்கிற்கு எந்தவித சழிப்பும் இல்லாமல் அழகாக கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு இடையில் இரண்டு அழகான காதல் கதைகளையும் இயக்குனர் காண்பித்து இருக்கிறார். பின்னணி இசையும் படத்திற்கு பக்க பலத்தை சேர்த்திருக்கிறது. ஆக மொத்தம் குறைந்தபட்சத்தில் ஒரு எதார்த்தமான அழகான கிராமத்து கதையை இயக்குனர் கொடுத்திருக்கிறார்.

நிறை:

ரோகினி, பசுபதியின் நடிப்பு சிறப்பு

கதைக்களம் அருமை

நகைச்சுவை நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது

எதார்த்தமான கிராமத்துக் கதை

குறை:

ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்

முதல் பாதி பொறுமையாக செல்கிறது

மற்றபடி சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிதான குறைகள் எதுவுமே இல்லை

மொத்தத்தில் ஒரு குறைந்த பட்சத்தில் தண்டட்டி படம் வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Advertisement