‘இந்த ரைட் எப்படி’ சுந்தர் சி நடித்துள்ள தலைநகரம் 2 படத்தின் முழு விமர்சனம் இதோ.

0
2222
Thainagaram2
- Advertisement -

இயக்குனர் விஇசட் துரை இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தலைநகரம் 2. இந்த படத்தில் சுந்தர் சி சுந்தர் சி, பாலக் லால்வானி, தம்பி ராமையா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். ரைட் ஐ தியேட்டர்ஸ், அருந்தவம் மூவி மேக்கர்ஸ் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுடன் இன்று வெளியாகி இருக்கும் தலைநகரம் 2 படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

சுந்தர் சி கதாநாயகனாக அறிமுகமான படம் தலைநகரம். இந்த படம் 2006 ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் தான் தலைநகரம் 2. முதல் பாகத்தில் சுந்தர் சி நடித்த அதே ரைட் கதாபாத்திரத்தில் தான் இந்த படத்திலும் நடித்திருக்கிறார். முதல் பாகத்தில் வடசென்னையின் மிகப்பெரிய ரவுடியாக ரைட் கதாபாத்திரத்தில் சுந்தர் சி நடித்திருந்தார். இரண்டாம் பாகத்தில் அதை விட்டுவிட்டு ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்து வருகிறார் சுந்தர் சி.

- Advertisement -

பின் வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை என மூன்று பகுதிகளிலும் பிரபலமான ரவுடியாக இருக்கும் மூவருக்கும் முன்னாள் ரவுடியான சுந்தர் சிக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது. அந்த பிரச்சினையை முடிக்க அவர் மீண்டும் ரவுடியாக மாறுகிறார். கடைசியில் சுந்தர் சி என்ன ஆனார்? என்பதே படத்தின் மீதி கதை. படம் முழுவதுமே சுந்தர் சி டெரராகவே இருக்கிறார். அவரின் சண்டை காட்சிகளில் ஒவ்வொரு அடியும் இடிபோல இறங்குகிறது என்று சொல்லலாம்.

மேலும், படத்தில் மூன்று வில்லன்களையும் தனித்தனியாக சுந்தர் சி வைத்து செய்கிறார் என்று சொல்லலாம். அதுமட்டுமில்லாமல் படம் முழுவதும் சுந்தர் சி தாங்கி செல்கிறார். ஆனால், வில்லன்களில் பாகுபலி பிரபாகர் மட்டும்தான் தெரிந்த முகம். மீதி இருவர் யார் என்று தெரியவில்லை? அது படத்திற்கு மைனஸ் ஆக இருக்கிறது. பிரபலமான வில்லன்களை படத்தில் போட்டு இருந்தால் நன்றாக இருந்திருக்கும். படத்தில் கதாநாயகியாக பாலக் லால்வானியை போட்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

கதாநாயகி இருக்க வேண்டும் என்பதற்காகவே போட்டிருக்கிறார்கள் தவிர மத்தபடி அவருடைய கதாபாத்திரம் பெரிதாக இல்லை. முதல் பாகத்தில் வடிவேலுவின் நகைச்சுவை இருந்தது. இந்த படத்தில் எந்த ஒரு நகைச்சுவையும் இல்லை. சென்டிமென்ட் காட்சிகளும் ஆங்காங்கே சில இடங்களில் தான் இருந்தது. பின்னணி இசையும் பெரிதாக சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை. படம் முழுக்க வன்முறையுடனே செல்கிறது.

படத்தின் ஆரம்பத்தில் ஒவ்வொரு வில்லனுடைய அறிமுகம் நீண்டு செல்வது பார்வையாளர்கள் மத்தியில் சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சுந்தர் சி யின் என்ட்ரி தாமதமாக தான் வந்திருக்கிறது. அதோடு இடைவெளி வரை படத்தில் கொஞ்சமாவது சுவாரசியம் இருந்தது. அதற்கு பின் எந்த ஒரு சுவாரசியமும் இல்லை. குறிப்பாக, கிளைமாக்ஸ் காட்சிப்படி தான் என்று பார்வையாளர்கள் யூகிக்க முடியும் அளவிற்கு இருந்தது. மத்தபடி சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிய பெரிதாக சுவாரசியமும் சஸ்பென்சும் படத்தில் இல்லை. ஒரு சுமாரான படமாக இருக்கிறது.

நிறை:

சுந்தர் சி யின் நடிப்பு சிறப்பு

சண்டை காட்சிகள் ஆக்ரோஷம்

முதல் பாதி சுமார்

மற்றபடி சொல்லிக் கொள்ளும் அளவிற்கு படத்தில் எந்த ஒரு சுவாரசியமும் இல்லை.

குறை:

பிரபலமான வில்லன்கள் இருந்திருக்கலாம்

கதைக்களத்தில் இயக்குனர் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்

பின்னணி இசை சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை

இரண்டாம் பாதியில் காட்சி

கிளைமாக்ஸ் காட்சிகள் யூகிக்க முடியும் அளவிற்கு இருக்கிறது

முதல் பாதி நீண்டு கொண்டே செல்கிறது

மொத்தத்தில் தலைநகரம் 2- தப்புமா? என்பது சந்தேகம்தான்

Advertisement