பிக் பாஸ் ஆரவ் நடித்துள்ள ‘மார்கெட் ராஜா’ எப்படி இருக்கிறது . முழு விமர்சனம் இதோ.

0
3157
market-raja
- Advertisement -

சரண் இயக்கத்தில் ஆரவ் நடிப்பில் வெளியாகி உள்ள படம் “மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். ஏற்கனவே கமல்ஹாசன் நடிப்பில் வசூல்ராஜா எம்பிபிஎஸ் படம் வந்தது இதனைத் தொடர்ந்து மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் என்று படம் எடுத்து உள்ளார்கள். தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் சரண். இவர் காதல் மன்னன், அமர்க்களம், ஜெமினி, வசூல்ராஜா எம்பிபிஎஸ், அட்டகாசம், முனி, அசல் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர். சில வருடங்களாகவே இவர் படங்கள் இயக்காமல் சினிமாவிலிருந்து ஒதுங்கி இருந்தார். தற்போது பிக் பாஸ் காதல் ரோமியோ ஆரவை வைத்து “மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்” என்ற படத்தை இயக்கி உள்ளார். மேலும், இந்த படத்திற்கு சைமன் கே.கிங் அவர்கள் இசை அமைத்து உள்ளார்கள். ஒளிப்பதிவு கே.வி.குகன் அவர்கள் செய்து உள்ளார்கள். இதனை தொடர்ந்து இந்த படத்தில் காவ்யா தபர், ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள்.

-விளம்பரம்-
Image result for market raja mbbs"

- Advertisement -

கதைக்களம்:

-விளம்பரம்-

ஊரில் அடிதடி, சண்டை, வெட்டு குத்து என செம ரகளை செய்து கொண்டு வருபவர் மார்கெட் ராஜா(ஆரவ்). மேலும், இவர் கேங்ஸ்டர்,தாதாவாக தன்னை நினைத்துக் கொண்டு பயங்கர முரட்டுத்தனமான ரவுடித்தனம் செய்பவர் ஆரவ். மேலும், இவருடைய தாய் தான் ராதிகா. அதோடு ஆரவ் பெயரைச் சொல்லி கொண்டு ஊரில் இருப்பவர்கள் எல்லாரையும் ஏமாற்றி பணம் பறிப்பவர். ஆனால், தன்னுடைய தாய் ராதிகாவை கொஞ்சம் கூட மதிக்காமல் ஊதாரித்தனமாக ரவுடித்தனம் செய்து சுற்றிக் கொண்டிருக்கிறார் ஆரவ். மேலும், ஆரவ் பெரிய அரசியல்வாதி ஒருவருக்கு அடையாளமாக இருக்கிறார். மேலும்,இவரை ஒரு “குட்டி தாதா” என்று சொல்லலாம்.

மேலும், இவர் அமைச்சருடன் நெருங்கி பழகுவதை அதே கட்சியில் இருக்கும் ஒரு நபரால் பார்த்து பொறுக்காமல் ஆரவ்வை கொலை செய்ய முயற்சி செய்கிறார். இது ஒரு பக்கம் இருக்க ஒரு நாள் கல்லூரியில் ஆரவ் ஒருவரை அடிக்கிறார். இவரின் துணிச்சலை பார்த்து காதல் வயப்படுகிறார் கதாநாயகி காவ்யா. ஆனால்,ஆரவ் அவர் மீது எந்த ஒரு ஈடுபாடும் இல்லாமல் இருக்கிறார். ஆனால், அதே கல்லூரியில் படிக்கும் பயந்தக்கோழி மாணவர் ஒருவர் காவியாவை காதலிக்கிறார். இந்நிலையில் போலீசிடம் ஆரவ் பகையை வைத்துக் கொள்ளுகிறார்.

Image result for market raja mbbs"

பின்னர் போலீசார் மார்க்கெட் ராஜாவை(ஆரவ்) சும்மா விடக்கூடாது என என்கவுண்டர் செய்ய வேண்டும் என பக்கா பிளான் போடுகிறார்கள். ஆனால், அந்த என்கவுண்டரில் கோழையும்,பயந்த சுபாவம் கொண்ட ஒரு மாணவன் சிக்கி விடுகிறான். மேலும், அந்த மாணவனுடைய ஆவி ஆரவ் உடம்பிற்குள் செல்கிறது. இந்நிலையில் ஆவி ஏன் ஆரவ் உடம்பிற்கு சென்றது? போலீஸ் என்கவுண்டரில் இருந்து ஆரவ் தப்பித்தாரா? கடைசியில் நாயகி கரம் பிடித்தாரா? என்பது தான் படத்தின் மீதி கதை. மேலும், ஆரவ் உடம்பிற்குள் ஆவி சென்றவுடன் படத்தின் காமெடி காட்சிகள் எல்லாம் வேற லெவல்ல பட்டையை கிளப்பி இருக்கிறது.

பிளஸ்:

படத்தில் ஆரவ் உடலில் ஆவி புகுந்து வரும் காமெடி காட்சிகள் எல்லாம் நன்றாக உள்ளது.

படம் முழுக்க முழுக்க அதிரடி,சண்டை,காமெடி என்று கமர்சியல் படமாக உள்ளது.

மைனஸ்:

இயக்குனர் சரண் அவர்கள் இயக்கிய படம் என்றாலே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுக்கும் என்று அவர் மீது ஒரு நம்பிக்கை இருக்கும். ஆனால், இந்த படம் அவர் மீதிருந்த நம்பிக்கையை போக்கி விட்டது என்று சொல்லலாம்.

மேலும்,”மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்” என்று அனைவரும் பயங்கர எதிர்பார்ப்புடன் இருந்தார்கள். ஆனால், படம் சொல்லி கொள்ளும் அளவு இல்லை என்று தெரிகிறது.

அதோடு படத்தின் கதை ஆரம்பத்தில் எதை நோக்கி சென்று கொண்டு உள்ளது என்று தெரியாமலேயே இருந்தது.

மேலும்,வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தின் சீசனை அப்படியே எடுத்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

கதாநாயகிக்கு படத்தில் என்ன வேலை என்று கேட்க்கும் அளவிற்கு உள்ளது.

Image result for market raja mbbs"

படத்தின் அலசல்:

சரண் இயக்கத்தில் வரும் படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் பயங்கர எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால்,இந்த படம் ஏதிர்பார்த்த வெற்றியை கொடுக்க வில்லை. இந்த படத்தில் ஆரவ் உடம்பில் ஆவி வந்த பிறகு தான் படமே என்ன என்பது புரிய வந்தது. மொத்தத்தில் “மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்” மார்க்கெட்டை இழந்து உள்ளது என்று தான் சொல்லலாம்.

Advertisement