மாஸ்டரின் மூன்று போஸ்டருக்கும் படத்திற்கும் உள்ள சம்மந்தம். ரகசியத்தை உடைத்த லோகேஷ் கனகராஜ்.

0
7277
lokesh

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக கலக்கி கொண்டு இருப்பவர் தளபதி விஜய். கடந்த ஆண்டு அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த “பிகில்” படம் வசூல் சாதனை செய்தது. பிகில் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் தற்போது நடித்து உள்ள படம் ‘மாஸ்டர்’. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து உள்ளார். இவர்களுடன் இந்த படத்தில் மாளவிகா மோகன், சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், மேத்யூ வர்கீஸ், சுனில் ரெட்டி,வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து உள்ளனர்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். இந்த படத்தினை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ தயாரித்து இருக்கிறது. சமீபத்தில் தான் இந்த படத்தில் இருந்து மூன்று பாடல்கள் வெளியாகி இருந்தது. இந்த பாடல் வெளியாகி சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங்கில் உள்ளது. இந்த பாடல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் தளபதி விஜயின் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று ஹோட்டல் லீலா அரண்மனையில் கோலாகலமாக நடை பெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவை சன் டிவியில் நேரடியாக ஒளிபரப்பு செய்தார்கள். சில நிமிடங்களுக்கு முன்பு தான் இந்த விழா மிகச் சிறப்பான முறையில் துவங்கியது. இந்த விழாவில் இப்படத்தை சேர்ந்த பலரும் கலந்து கொண்டார்கள். பின் ஒருவர் பின் ஒருவர் மாஸ்டர் படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார்கள்.

Image result for master first look

-விளம்பரம்-

அதில் லோகேஷ் கனகராஜ் பேசுகையில் படத்தில் இருந்து வெளிவந்த ஒவ்வொரு போஸ்டர்களும் ஒவ்வொரு காட்சிகளை குறிக்கும் என்று கூறினார் பர்ஸ்ட் லுக் போஸ்டர் –ஹீரோ அறிமுக காட்சி. செகண்ட் லுக் போஸ்டர் — இடைவேளை காட்சி, தேர்டு லுக் போஸ்டர்– கிளைமாக்ஸ் காட்சி என்று கூறியுள்ளார். மேலும், அதில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் நிறைய பேருக்கு நன்றி கூறி இருந்தார்.

அதில் அவர் கூறியது, தளபதிக்கு நன்றி. நான் கதையை விஜய் சேதுபதி கூறவே இல்லை. இருந்தாலும் விஜய் சேதுபதி சிறப்பாக நடித்து கொடுத்தார். அதனால் நான் அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன். ராக் ஸ்டார் அனிருத் அவர்களுக்கு நன்றி. படத்தின் அனைத்து பாடல்களும் மிகச்சிறப்பாக வந்து உள்ளது.

Image result for master third look

இதனை தொடர்ந்து இப்படத்தில் முதன் முதலில் நான் எழுத்து துவங்கியதிலிருந்து விஜய் அண்ணாவும், விஜய் சேதுபதி அண்ணாவும் தான் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். நான் நினைத்தது போலவே இந்த படம் அருமையாக வந்துள்ளது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்று கூறியிருந்தார்.

Advertisement