போஸ்டரை பாத்துட்டு விஜய் சார் ஒரே ஒரு கேள்வி கேட்டார். மாஸ்டர் போஸ்டர் டிசைனர் சொன்ன தகவல்.

0
53805
master

தமிழ் சினிமா திரை உலகில் வசூல் மன்னனாக பட்டைய கிளப்பி கொண்டு இருப்பவர் தளபதி விஜய். சமீபத்தில் தான் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் “பிகில்” படம் வெளியானது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்கள் நடித்து உள்ளார். மேலும், விஜயின் பிகில் படம் ரசிகர்களை தெறிக்க விட்டது. இது அனைவருக்கும் தெரிந்ததே. பிகில் படத்தை தொடர்ந்து தளபதி விஜய்யின் அடுத்த படமான ‘மாஸ்டர்’ படம் குறித்த பல தகவல்கள் இணையங்களில் வெளி வந்து உள்ளது. இந்த படத்தை மாநகரம், கைதி படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்குகிறார்.

Master Third look

- Advertisement -

விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி பாக்யராஜ், ப்ரிகிடா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், சேத்தன், அழகம் பெருமாள், மேத்யூ வர்கீஸ், சுனில் ரெட்டி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். மேலும், இந்த படத்தை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார்.

இதையும் பாருங்க : முகெனை போல சாண்டி குடும்பத்திலும் நேர்ந்த இறப்பு. சோகத்தில் சாண்டி குடும்பத்தார்.

மேலும், இந்த படத்திற்கான பஸ்ட் லூக் போஸ்டர் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பஸ்ட் லூக் போஸ்டர் வெளிவந்ததில் இருந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை வடிவமைத்தவர் கோபி பிரசன்னா. அதேபோல அடுத்தடுத்து வந்த செகண்ட் லுக் மற்றும் தேர்ட் லுக் போஸ்டர்கள் படுமாஸாக இருந்தது. இந்த நிலையில் இந்த போஸ்டர் வடிவமைத்தல் குறித்து வடிவமைப்பாளர் கோபி பிரசன்னா கூறுகையில் `மாஸ்டர்’ படத்துக்கான ஃபர்ஸ்ட் லுக்கை ரெடிசெய்து விட்டு , விஜய் சார்கிட்ட காட்டினோம். அவர் பார்த்துட்டு, ரொம்பவே சர்ப்ரைஸ் ஆகிட்டார். ஒரு கேள்வி கேட்டார். `இப்படி ஒரு அவுட்புட் வரும்னு நான் எதிர்பார்க்கவே இல்லை.

-விளம்பரம்-
Gopi Prasanna

இப்படிலாம்கூட யோசிக்க முடியுமா. எப்படி ஐடியா புடிச்சீங்க’என்று கேட்டார் என்று கூறியுள்ளார். ஏற்கனவே பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஏன் Blur இமேஜ் இருக்கிறது என்று கேள்வி கேட்கப்பட்டதற்கு, முதலில் விஜய் அவர்களின் புகைப்படத்தை அப்படியே தான் போஸ்டரில் வைக்கலாம் என்று யோசித்தார்கள். ஆனால், நான் தான் blur ஐடியாவை கொடுத்தேன். மேலும், அவரது கதாபாத்திரத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்த போஸ்டர் இருக்கும் என்பதால் அப்படியே செய்தோம் என்று கூறி இருந்தார்.

Advertisement