அந்த பாட்ட கேட்கும் போது அழுகை தான் வருது – அதிதியால் நீக்கப்பட்ட தனது பாடல் குறித்து பிரபல வாடகை வேதனை.

0
2232
maaveeran
- Advertisement -

சிவகார்த்திகேயனின் வண்ணாரப்பேட்டை பாடல் நான் பாடியது என்று மீனாட்சி இளையராஜா அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பார் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த படம் மாவீரன். இந்த படத்தை இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இந்த படம் சிவகார்த்திகேயனுக்கு வெற்றி படமாக அமைந்து இருக்கிறது. இந்த படத்தை பார்த்து பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள். பின் இந்த படத்தில் பணியாற்றியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக படக்குழு நிகழ்ச்சி ஒன்றை நடத்தி இருந்தது. தற்போது இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதோடு இந்த படம் எந்த அளவிற்கு பிரபலமோ அதே போல் இந்த படத்தில் இடம்பெற்ற வண்ணாரப்பேட்டை பாடலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறது. இந்த பாடலை சிவகார்த்திகேயன், அதிதி சங்கர் பாடியிருந்தார்கள். அது மட்டும் இல்லாமல் இந்த பாடலுக்கு பலரும் ரிலீஸ் வீடியோக்களை வெளியிட்டு இருந்தார்கள்.

- Advertisement -

மாவீரன் படம்:

இந்த நிலையில் இந்தப் பாடலை நான் தான் பாடினேன் என்று பாடகி மீனாட்சி இளையராஜா அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இவர் சமீபத்தில் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த ஆகஸ்ட் 16 1947, குட் நைட் போன்ற படங்களில் பாடியிருக்கிறார். அதற்குப் பிறகு சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் வண்ணாரப்பேட்டை பாடலுக்கு முதலில் மீனாட்சி தான் தேர்வாகி இருந்தார். அதற்கு பிறகு தான் அதிதி சங்கர் தான் இந்த பாடலை பாடி இருந்தார்.

மீனாட்சி இளையராஜா அளித்த பேட்டி:

இது குறித்து பாடகி மீனாட்சி இளையராஜா கூறி இருப்பது, நான் ஷான் ரோல்டனிசையில் ஆகஸ்ட் 16 1947 படத்தின் “கோட்டிக்கார பயலே” என்ற பாடல் பாடியிருந்தேன். அதைக் கேட்டு தான் இசையமைப்பாளர் பரத் சங்கர் என்னை மாவீரன் படத்தில் வண்ணாரப்பேட்டை பாடலில் பாட சொல்லியிருந்தார். மாவீரன் படத்தில் பணியாற்றியது புதுவிதமான அனுபவமாக இருக்கிறது. இந்த படத்தில் நான் பாடிய வண்ணாரப்பேட்டை பாடலை கேட்டு பரத் சங்கர் பாராட்டி இருந்தார்.

-விளம்பரம்-

புலம்பும் பாடகி மீனாக்ஷி:

அதேபோல் அதிதியும் நன்றாக தான் பாடியிருந்தார். இருந்தாலும் நான் பாடியது படத்தில் வராதது நினைத்து கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. 15 வருடம் போராட்டத்திற்கு பிறகு தான் எம்ஜிஆர் மகன், கர்ணன், ஜகமே தந்திரம் என்று சினிமாவில் வளர்ந்து வருகிறேன். பின் சிவகார்த்திகேயன் போன்ற பெரிய நடிகர்களின் படத்தில் பாட வாய்ப்பு கிடைத்தது. ஆனால், என்னால் படத்தில் தான் இடம் பெறவில்லை. நிச்சயம் இந்த படம் என்னுடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுறையாக இருக்கும் என நினைத்தேன். அதிதிசங்கர் அளவிற்கு திறமையாக நாம் பாடவில்லை போல என்று நினைத்து என்னை நானே தேற்றி கொண்டேன்.

பாடகி ராஜலக்ஷ்மி பாடிய பாடல்:

இன்று அந்த பாடலை கேட்கும் போது எனக்கு அழுகை தான் வரும். அதேசமயம் இதைவிட பல மடங்கு பெரிதாக ஒரு வாய்ப்பு கிடைக்கும். வாய்ப்பு எனக்காக காத்துக் கொண்டிருக்கும் என்று நான் என்னை தேற்றிக் கொண்டேன் என்று கூறியிருக்கிறார். அதேபோல் விருமன் படத்தில் மதுரவீரன் என்ற பாடலை பாட முதலில் பாடகி ராஜலட்சுமி தான் வாய்ப்பு கிடைத்திருந்தது. அவரும் பாடலை பாடி இருந்தார். அதற்கு பின் அதிதி சங்கரை இந்த பாடலை பாட வைத்தார்கள். இப்படி பல பாடகிகளின் வாய்ப்பை அதிதி சங்கர் தட்டிப் பறித்து இருக்கிறார் என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்.

Advertisement