ஒரு பக்கம் கதிர், வளவன், இன்னொரு பக்கம் ஜனனி – ஜீவானத்தம் தப்பிப்பாரா ? – குணசேகரன் ஸ்கெட்ச் பலிக்குமா ?

0
2051
Janany
- Advertisement -

எதிர்நீச்சல் சீரியலில் ஜீவானந்தம் கதையை முடிக்க குணசேகரன் போட்டு இருக்கும் திட்டம் குறித்த இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் டிஆர்பியில் உச்சசத்தில் இருக்கும் சீரியல் எதிர்நீச்சல். தற்போது இந்த சீரியல் தான் பட்டிதொட்டி எங்கும் பிரபலம். இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், இந்த சீரியல் அடக்கு முறைக்கு உட்படும் பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. இந்த சீரியலை இயக்குனர் திருச்செல்வம் இயக்கி வருகிறார். மேலும்,இந்த சீரியலில் இயக்குனர் திருச்செல்வம், ஹரிப்ரியா, மதுமிதா, விபு ராமன், மாரிமுத்து, கமலேஷ், சபரி பிரசாந்த் உட்பட பலர் நடித்து வருகிறார்கள். அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தையும், பெண்களுக்கான உரிமையையும் மையமாக கொண்ட கதை தான் எதிர்நீச்சல்.

- Advertisement -

எதிர்நீச்சல் சீரியல்:

மேலும், மதுரையில் கூட்டு குடும்பமாக அண்ணன், தம்பிகள் வாழ்கிறார்கள். இந்த கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த குடும்பத்திற்கு திருமணம் செய்து வரும் பெண்கள் எல்லாம் வீட்டு வேலை செய்யும் வேலைக்காரர்களாக நடத்தி வருகிறார்கள். அதுவும் அதிகம் படித்த பெண்களை தேடி சென்று திருமணம் செய்கிறார்கள். அவர்களை எதிர்த்து எந்த கேள்வியும் கேட்க முடியாமல் அந்த பெண்களும் அமைதியாக இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் தான் ஜனனி இந்த வீட்டின் கடைசி மருமகளாக வருகிறார்.

சீரியலின் கதை:

இவர் அங்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கிறார். இதனால் வீட்டில் அதிக பிரச்சனைகள் நடக்கிறது. பின் மற்ற பெண்களும் தங்களின் உரிமையை கேட்டு போராடுகிறார்கள். தற்போது சீரியலில் சொத்து ட்ராக் தான் சென்று கொண்டு இருக்கிறது. சொத்துக்கள் மொத்தம் ஜீவானந்தம் பெயரில் மாறிவிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆதி குணசேகரன் வீட்டுப் பெண்களை வைத்து தான் தன்னுடைய விளையாட்டை தொடங்குகிறார். மேலும், ஜீவானந்தத்தை பழிவாங்க குணசேகரனும் அவருடைய தம்பி கதிரும் சேர்ந்து போலீசாக இருக்கும் கிள்ளிவளவனை சந்தித்து ஜீவானந்தத்தை போட்டு தள்ள முயற்சிக்கிறார்கள்.

-விளம்பரம்-

குணசேகரன் திட்டம்:

இன்னொரு பக்கம் ஜீவானந்தத்தை பற்றி தெரிந்து கொள்ள ஜனனியும் சக்தியும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் சக்திக்கு அம்மை போட்டதால் ஜீவனந்தத்தை சந்திக்க அவரால் ஜனனியுடன் செல்ல முடியவில்லை. இதனால் ஜனனி தனியாகவே ஜீவானந்தத்தை சந்திக்க செல்கிறார். இன்னொரு பக்கம் குணசேகரன் இன்னும் இரண்டு நாளில் எல்லோருக்கும் ஒரு நல்ல செய்தியை சொல்வேன். எல்லாம் தெரிந்து விடும் என்று வீட்டு பெண்களிடம் சொல்கிறார்.இதனால் வீட்டில் உள்ள எல்லோருமே ஒன்னும் புரியாமல் குழப்பத்தில் இருக்கிறார்கள்.

சீரியல் குறித்த ப்ரோமோ :

இந்த நிலையில் தற்போது சீரியலில் ஜீவானந்தம் இருக்கும் இடத்தை ஜனனி அறிந்து செல்கிறார். ஜீவானந்தம் தன்னுடைய மனைவி, மகளை பார்ப்பதற்காக வீட்டிற்கு வருகிறார். இன்னொரு பக்கம் ஜீவானந்தத்தை கொள்ள கிள்ளி வளவனும், கதிரும் இணைந்து ரவுடி கும்பலுடன் காத்திருக்கிறார்கள். இதனை அடுத்து ஜீவானந்தத்தை கதிர்- கிள்ளிவளவன் கும்பல் தாக்குமா? ஜனனி ஜீவானந்தத்தை காப்பாற்றுவாரா? ஜீவானந்தம் மனது மாறி சொத்துக்களை திருப்பி தருவாரா? போன்ற பல அதிரடித் திருப்பங்களுடன் சீரியல் செல்ல இருக்கின்றது.

Advertisement