வயசு வித்யாசம் பார்க்காம பச்சை பச்சையா கேட்பேன்.! மீராவின் பேச்சால் விழி பிதுங்கிய சரவணன்.!

0
2434
Meera-Saravanan
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக மூன்று வாரத்தை நெருங்கி விட்டது. நேற்றய நிகழ்ச்சியில் அனைவரும் எதிர்பார்த்தது போல வனிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டர். இருப்பினும் வனிதா சென்றதால் இனி பிக் பாஸ் நிகழ்ச்சியில் சண்டையும் ஸ்வாரசியமும் இருக்காது என்று ரசிகர்கள் கொஞ்சம் அப்சட் ஆகியுள்ளனர்.

-விளம்பரம்-

அதே போல ஹவுஸ் மேட்ஸ்கள் சிலரும் வனிதா வீட்டை விட்டு வெளியேறியதை எண்ணி மிகவும் வருத்தப்பட்டனர். அந்த வகையில் நேற்று கவின், சாண்டி, சரவணன், மீரா ஆகியோர் வெளியில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது கவின், வனிதா சென்றதால் இனி சண்டை போடா ஆளே இல்லை என்று கூறினார்.

இதையும் பாருங்க : உடன் இருக்கும் நபரையே நாமினேட் செய்த சாக்க்ஷி.! இப்படி ஒரு ட்விஸ்ட்டா.! 

- Advertisement -

அதற்கு மீரா, அதான் நான் இருக்கேனே சண்டை போடா என்று கூறினார். அதற்கு கவின், நீ அவங்க அளவிற்கு எலாம் பேச்சு குடுக்க மாட்ட, 10 பாய்ன்டு பேசிட்டு நீ போய்டுவா. ஆனால், அவங்க மத்தவங்கல தான் வனிதா அக்கா ஓட விடுவாங்க என்றார்.

அதற்கு மீராவோ, நான் யாருக்கும் பயப்பட மாட்டேன் இனி யாராக இருந்தாலும் நாக்கை பிடிங்கிக்கர மாதரி பச்சை பச்சையாக கேட்பேன், நான் இனி வயசு வித்தியாசம் கூட பார்க்க மாட்டேன். ஒரு எல்லை தாண்டி போச்சு என்றால் நான் வாயை திறந்தாள் அவ்வளவு தான் என்று கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டார் மீரா.

-விளம்பரம்-

அதன் பின்னர் மீரா பேசியதை கண்டு ஷாக் ஆகிப்போன சரவணன், மிகவும் பிரமித்து போய் பார்த்துக்கொண்டிருந்தார். மேலும், சாண்டி மற்றும் கவின் இருவரும் நாம் இனி லேசாக கொளுத்தி போட்டுவிட்டு வந்துவிட்டால் போதும் போல என்று கிண்டலடித்தனர்.

ஏற்கனவே மீரா மிதுன் தர்ஷன் மீது பொய்யான குற்றச்சாட்டை முன் வைத்து ரசிகர்களின் கோபத்திற்கு உலகியுள்ளார். அதே போல தற்போதுள்ள போட்டியாளர்களின் மீரா மிதுன் தான் ஹவுஸ் மேட்ஸ்களின் வெறுப்பை சம்மதித்துள்ளார். இதனால் இந்த வாரம் இவர் நாமினேஷனில் இடம்பெறுவது மட்டும் உறுதி என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement