தமிழ் சினிமாவில் கடந்த 30 வருடங்களாக தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் வலம் வரும் ரஜினிகாந்த். இவர் நடித்த அணைத்து படங்களுமே பெரிய ஹிட் ஆடித்தது. குறிப்பாக இயக்குனர் சங்கர் இலாயக்கத்தில் வந்த எந்திரன் மற்றும் 2.0 என இரண்டு படங்களும் மெகா ஹிட் அடித்து ரஜினிகாந்தை உலக சினிமா ரசிகர்கள் கொண்டாடும் அளவுக்கு பெரிய ஹிட் கொடுத்தது.அதிலும் ரஜினி நடிப்பில் வெளியான 2.0 திரைப்படம் சுமார் 800 கோடிக்கு வசூல் செய்த்தாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் ரஜினிகாந்த் மற்றும் விஜய் என இரண்டு நடிகர்களையும் ஒப்பிட்டு பலர் சமூக வலைத்தளங்களில் பேசி வருகின்றனர். அதிலும் சிலர் விஜய் தான் இப்போது தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் என்று கூறிவருகின்றனர். அதற்கு ரஜினிகாந்த் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வரும் நிலையில் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான மீசை ராஜேந்திரன் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் ரஜினிகாந்த் ஒருவருக்கு மட்டுமே சொந்தமானது என்று சமீபத்தில் கொடுத்திருந்த பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.
ரஜினியை நகலெடுக்கவும் ரடிகர்கள் :
ரஜினிகாந்த் தொடக்கத்தில் சிறிய வில்லன் நடிகராக அறிமுகமானாலும் பின்னர் அவரின் விட முயற்சியின் மூலம் இன்று சூப்பர் ஸ்டார் என்று கூறினால் பாலியுட் பிரபலங்கலே ரஜினிகாந்த என்று கூறும் அளவிற்கு வளர்ந்து இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான சூர்யா, விஜய், அஜித், தனுஷ் போன்ற நடிகர்கள் பலரும் ரஜினிகாந்தின் நடிப்பு மற்றும் ஸ்டைலை பின்பற்றி நடித்துள்ளனர்.
Bro After OCT 19 😂😂😂 pic.twitter.com/lZDPS1kkPB
— Arun Vijay (@AVinthehousee) September 4, 2023
சரத்குமார் கூறியது :
இந்த நிலையில் வாரிசு படத்தின் இசை வெளியிட்டு விழாவின் போது அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சரத்குமார் விஜய்தான் சூப்பர் ஸ்டார் என்று கூறியிருந்தார். இதனை அவர் சூரிய வம்சம் படத்தின் போது கூட கூறியிருந்தார் என்பது குறிப்பிடதக்கது. இதற்கு எதிராக சோசியல் மீடியாவில் ரசிகர்கள் தங்களின் எதிர்ப்பை கூறிவரும் நிலையில் அஜித் ரசிகர்களும் எங்களுக்கு முதலில் சூப்பர் ஸ்டார் அதற்கு பிறகுதான் தல அஜித் என்று கூறிவருகின்றனர்.
மீசை ராஜேந்திரன் கூறியது :
இந்த நிலையில் தான் தற்போது ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான மீசை ராஜேந்திரன் ஒரு பேட்டியில் ரஜினிதான் எப்போதுமே சூப்பர் ஸ்டார் என்று கூறியிருந்தார். இவர் ரஜனிகாந்த் நடித்த சிவாஜி படத்தில் ரஜினியுடன் நடித்திருந்தார். இவர் கூறுகையில் விக்ரம் மற்றும் பொன்னியின் செல்வன் போன்ற திரைப்படங்கள் பெரிய ஹிட் கொடுத்தாலும் அவை ரஜினிகாந்தின் 2.0விற்கு ஈடுகொடுக்க முடியவில்லை. அப்போது ஒரு வெற்றியை கொடுத்த ரஜினிகாந்தின் சூப்பர் ஸ்டார் பட்டதற்கு விஜய் ஆசைப்படலாமா.
After leo release 😁😂🔥#Leo #Thalapathy68 pic.twitter.com/xssyvfHLiK
— Kettavan #LEO (@Itz_Kettavan_) September 4, 2023
என்றுமே ரஜினிதான் சூப்பர் ஸ்டார் :
கடந்த வருடங்களில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் பீஸ்ட், சர்க்கார் போன்ற படங்கள் அதிக வசூல் என்று கூறப்பட்ட நிலையில் அவை 200 கோடி வரை வசூல் செய்தன நிலையில் அதை தவிர பெரிய சாதனையை விஜய் செய்யவில்லை. ரஜினிகாந்தின் 800 கோடி வசூலை ஏற்படுத்திவிட்டு விஜய் சூப்பர் ஸ்டார் பட்டத்தை பற்றி பேசலாம். என்றுமே ரஜினி ஒருவர்தான் எங்களுக்கு சூப்பர் ஸ்டார். லியோ படம் மட்டும் ஜெயிலர் அளவிற்கு லியோ திரைப்படம் வசூல் செய்தால் நான் என்னுடைய மீசையை எடுக்கிறேன். லியோ 300 கோடிக்கு மேல் தாண்டாது. ஒரு லட்சம் பந்தயம் வச்சிக்கலாம்.