இதனால் தான் வடிவேலு கேப்டன் இறப்புக்கு வரல – மன்சூர் அலிகான் சொன்ன பதில். வீடியோ இதோ.

0
265
- Advertisement -

விஜயகாந்த்தின் இறுதி சடங்கிற்கு வடிவேலு வராதது குறித்து நடிகர் மன்சூர் அலிகான் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சோசியல் மீடியா முழுவதும் விஜயகாந்தின் இறப்பு செய்தி தான் வைரலாகி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக விஜயகாந்த் உடல் நல குறைவின் காரணமாக சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் விலகி சிகிச்சை பெற்று இருந்தார். பின் கடந்த மாதம் விஜயகாந்த் மியாட் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து பூரணமாக குணமடைந்து விட்டதாக விஜயகாந்த் வீடு திரும்பி இருந்தார்.

-விளம்பரம்-

பின் சில தினங்களுக்கு முன் காலை அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். மேலும், கேப்டனின் மறைவிற்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து இருக்கின்றார்கள். விஜயகாந்தின் இறப்பு ஒட்டு மொத்த தமிழகத்தையும் புரட்டி போட்டு இருக்கிறது. நேற்று முன் தினம் மாலை விஜயகாந்தின் உடல் அரசு மரியாதை உடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.. லட்சக்கணக்கான மக்கள், தொண்டர்கள், ரசிகர்கள் நேரில் சென்று விஜயகாந்தின் இறப்பிற்கு அஞ்சலி செலுத்தி இருக்கிறார்கள்.

- Advertisement -

மன்சூர் அலிகான் செய்த செயல்:

அந்த வகையில் விஜயகாந்த் இறப்பு செய்தியை அறிந்த மன்சூர் அலிகான் விஜயகாந்த் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தி இருந்தார். பின் சாலிகிராமத்தில் இருந்து கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை இருந்து விஜய்காந்தின் உடல் கொண்டு செல்லப்பட்டது. சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக அவருடைய உடல் கொண்டு செல்லப்பட்ட வாகனத்தில் மக்களோடு மக்களாக மன்சூர் அலிகான் நடந்து சென்றிருந்தார். பின் விஜயகாந்த் உடைய உடல் தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

விஜயகாந்த் உடல் நல்லடக்கம்:

இரவு பகல் பார்க்காமல் விஜயகாந்த் உடலை விட்டு கொஞ்சம் கூட நகராமல் மன்சூர் அலிகான் அங்கேயே இருந்தார். மன்சூர் அலிகான் இந்த செயல் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்று இருக்கிறது. மேலும், விஜயகாந்த் உடலுக்கு 72 குண்டுகள் முழங்க முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் முன்னிலையில் அரசு மரியாதை உடன் நல்லடக்கம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் மன்சூர் அலிகான், மூன்று வருடங்களாக உடல் ரீதியாக விஜயகாந்த் நிறைய துயரத்தை அனுபவித்திருக்கிறார்.

-விளம்பரம்-

வடிவேலு குறித்து சொன்னது:

அவர் இறைவனடி சேர்ந்தது நல்ல விஷயமாகத்தான் அனைத்து மக்களும் ஆத்மார்த்தமாக நினைத்து இருப்பார்கள். அந்த வகையில் தான் நானும் சென்று அவரை வழி அனுப்பி வைத்து விட்டு வந்தேன் என்று கூறி இருந்தார். உடனே அங்கிருந்த ஒருவர், விஜயகாந்தின் இறப்பிற்கு நடிகர் வடிவேலு ஏன் வரவில்லை? என்று கேட்டிருக்கிறார். அதற்கு மன்சூர் அலிகான், மன்னிக்கவும். அதை நான் சொல்ல விரும்பவில்லை. கேப்டன் விஜயகாந்த் இனம், மொழி, ஜாதிகளுக்கு அப்பாற்பட்டு அனைத்து மக்களாலும் விரும்பப்பட்ட ஒரு மனிதர் என்று கூறியிருக்கிறார்.

வடிவேலு-விஜயகாந்த் சண்டை:

விஜயகாந்த் மறைவிற்கு வடிவேலு மட்டும் அஞ்சலி செலுத்த வரவில்லை. இது தொடர்பாக அவர் பதிவும் போடவில்லை. இது குறித்து நெட்டிசன்கள் விமர்சித்து இருக்கிறார்கள். காரணம், பத்தாண்டுகளுக்கு முன்பு தேர்தலின் போது வடிவேலு திமுக கட்சியில் இணைந்து கொண்டு விஜயகாந்தை மிக மோசமாக விமர்சித்து பேசி இருந்தார். அப்போதிலிருந்தே இரு தரப்பிற்கு மத்தியில் சண்டை சச்சரவுகள் இருந்தது. ஆனால், விஜயகாந்த், வடிவேலுவை பாராட்டி பேசி இருந்தார்.

Advertisement