மேற்குத் தொடர்ச்சி மலை பட நடிகையா இது..! எப்படி இருக்காங்க பாருங் .! புகைப்படம் இதோ.!

0
3659
Merku-thodarchi-malai
- Advertisement -

`ஜோக்கர்’, `மேற்குத் தொடர்ச்சி மலை’ உள்ளிட்ட படங்களில் நடித்த காயத்ரி அவருடைய சினிமா என்ட்ரி பற்றிப் பேசியிருக்கிறார்.

-விளம்பரம்-

jayathri actress

- Advertisement -

ஈஸ்வரியின் நடிப்பு சூப்பர்’னு எல்லோரும் பாராட்டும்போது, `நம்மளைதான் பாராட்டுறாங்களா, இவ்வளவு பெரிய ஸ்டார்கள் உள்ள தமிழ் சினிமாவுல நமக்கும் ஒரு இடம் கிடைச்சிடுச்சா?!’னு சந்தோஷமா உணர்ந்தேன். போன் கால், பொக்கேனு பாராட்டும் வாழ்த்துகளுமாதான் தினம்தினம் கழியுது!” – `மேற்குத் தொடர்ச்சி மலை’ நாயகி காயத்ரியின் பேச்சில் அவ்வளவு சந்தோஷம். படத்தில் இவர் அந்த ஈஸ்வரியாகவே வாழ்ந்திருந்தார். பட அனுபவம் குறித்து அவரிடம் பேசினேன்.

நான் ஒரு மலையாளி. படித்து வளர்ந்ததெல்லாம் பெங்களூரு. சினிமாவுக்கு வருவேன்னு கனவுலகூட நினைச்சதில்லை. ஆனா, இன்னைக்கு அதெல்லாம் நடந்துடுச்சு. சின்ன வயசிலிருந்தே பரதம் ஆடுவேன். அதனால முகபாவனைகள் அழகாக வரும். அப்படி எடுத்த சில போட்டோக்களை ஃபேஸ்புக்ல போஸ்ட் பண்ணியிருந்தேன். அந்த போட்டோக்களை `96′ பட இயக்குநர் பிரேம்குமார் சார் பார்த்திருக்கார். அப்போ அவர் இயக்குநர் பாலாஜி தரணிதரனோட `ஒரு பக்கக் கதை’ படத்தின் ஒளிப்பதிவாளர்.

-விளம்பரம்-

jayatri

jayathri

Actress jayathri

அந்தப் பட ஹீரோயின் ரோலுக்கு நான் சரியா இருப்பேன்னு பிரேம் சாருக்குத் தோன்றியிருக்கு. என்கிட்ட கேட்டார். ஆனா, அந்த சமயத்துல என்னால முடியலை. பிறகு, பிரேம் சார் என்னைப் பற்றி விஜய் சேதுபதி சார்கிட்ட சொல்லியிருக்கார். அவர் தயாரிக்கிற `மேற்குத் தொடர்ச்சி மலை’ பட ஈஸ்வரி கேரக்டருக்கு நான் சரியா இருப்பேன்னு நினைச்சிருப்பார்போல!

இப்போ, மலையாளத்தில் ஒரு படத்துல நடிக்கிறேன். அந்தப் பட ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு என் மாமியார் வீட்டைச் சேர்ந்த யாராவது ஒருத்தர்தான் எனக்குத் துணையா வர்றாங்க. அந்தளவுக்கு அவங்க எனக்கு முழு சப்போர்ட் தர்றாங்க!” மகிழ்வும் நெகிழ்வுமாக முடிக்கிறார், காயத்ரி.

Advertisement