மெர்சல் படத்துக்காக இவருக்கு ‘1’ கோடி சம்பளமா ? ஆச்சர்யத்தில் பிரபலங்கள் !

0
1757
mersal

விஜய் நடித்து அட்லீ இயக்கிய படம் மெர்சல். இந்த படம் சென்ற தீபாவளிக்கு வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு கதை எழுதியவர் விஜயேந்திர பிரசாத். இவர் தான் பாகுபாலியின் இரண்டு பாகங்களுக்கும் கதை எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vijayendra Prasad

மேலும், பாகுபலி இயக்குனர் ராஜமௌலியின் தந்தை தான் இந்த விஜயேந்திர பிரசாத். சல்மான் கான் நடித்து ஹிந்தியில் வெளியாகி செம்ம ஹிட் ஆன பஜிரங்கி பாய்ஜான் படத்திற்கும் கதை எழுதியது இவர்தான்.

இந்நிலையில் மெர்சல் படத்திற்கு கதை எழுதியதற்க்காக இவருக்கு கொடுக்கப்பட்ட சம்பள தொகை வெளியாகி உள்ளது. மெர்சல் பட கதைக்கு மட்டும் இவருக்கு 1 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது ராகவா லாரான்ஸின் காஞ்சான – 3 படத்திற்கும் இவர் தான் கதை எழுதி வருகிறார்.