காதலியை கரம் பிடித்தார் மிர்ச்சி விஜய்.! யார் யார் எல்லாம் போய் இருக்காங்க தெரியுமா.!

0
3856
mirchi-vijay
- Advertisement -

ரேடியோ மிரச்ச்சி FM சேனலில் ஆர்ஜேவாக இருந்து வந்து பலருக்கும் பரிட்சயமான குரல் இருக்கிறது அவரது குரல்! தற்போது கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’ நிகழ்ச்சியை  தொகுத்து வழங்கி விஜேவாகவும் கலக்கிக் கொண்டிருக்கிறார் ஆர் ஜி விஜய். 

-விளம்பரம்-

தற்போது கணவராக தனது வாழ்க்கையை துவங்கி உள்ளார் விஜய். ஆம், மிர்ச்சி விஜய்க்கு விரைவில் டும் டும் டும். மிர்ச்சி விஜய். இரண்டு வருடமாக காதலித்து வந்த மோனிகா என்கிற பெண்ணை கரம் பிடிக்கவுள்ளாராம். தனது காதல் குறித்து மிர்ச்சி விஜய் தெரிவிக்கையில்.

- Advertisement -

அவங்க என் ஃப்ரெண்ட்டோட ஃப்ரெண்ட். நான் கலந்துகிட்ட ஒரு நிகழ்ச்சியில் அவங்க எனக்கு அறிமுகமானாங்க. அதுக்கப்புறம் ஃப்ரெண்ட்ஸா பேச ஆரம்பிச்சோம். நல்ல நண்பர்களாக எங்களுடைய பயணம் தொடர்ந்துச்சு. இரண்டு வருஷமா காதலிக்கிறோம். இப்போ காதல், கல்யாணத்தை எட்டியிருக்கு! அவ்வளவு தாங்க!”  என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் ரஜினியின் மகள் திருமணம் நடந்த பிப்ரவரி 10 ஆம் தேதியே விஜய்கும் திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், பிரசன்னா ஸ்னேஹா, ரியோ ராஜ், கணேஷ் வெங்கட் ராமன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

-விளம்பரம்-
Advertisement