மஞ்சுமேல் பாய்ஸ்ஸை தொடர்ந்து மேலும் ஒரு பீல் கூட மலையாள படம் – பிரேமலு முழு விமர்சனம்.

0
618
- Advertisement -

மலையாள மொழியில் சமீபத்தில் வெளிவந்த மஞ்சுமோல் பாய்ஸ் படம் தமிழில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. இதனை அடுத்து தற்போது தமிழில் வெளியாகியிருக்கும் மலையாள படம் பிரமேலு. இந்த படம் கடந்த பிப்ரவரி ஒன்பதாம் தேதி தான் மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தை பிரபல இயக்குனர் கிரிஷ் இயக்கியிருந்தார். விஷ்ணு விஜய் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார். இந்த படத்தில் மமிதா பைஜூ, நஸ்லேன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். தற்போது இந்த படத்தை தமிழில் டப் செய்து வெளியிட்டு இருக்கிறார்கள். இந்த படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைகளம்:

படத்தில் ஹீரோ நஸ்லானுக்கு லண்டன் போக வேண்டும் என்பது ஆசை. இதனால் இவர் கல்லூரி முடித்துவிட்டு எப்படியாவது லண்டன் போக வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருக்கிறார். ஆனால், அவருக்கு விசா கிடைக்கவில்லை. இதனால் இவர் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து ஹைதராபாத்தில் கேட் கோச்சிங் போகலாம் என்று நினைக்கிறார். அதே சமயம் இவர் இன்னொரு பக்கம் விசாவுக்கும் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.

- Advertisement -

கதாநாயகி மமிதா ஹைதராபாத்தில் தான் இருக்கிறார். இவர் ஐடியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் ஹீரோ நஸ்லான், ஹீரோயின் மமிதா இருவருமே ஒரு கல்யாண வீட்டில் தான் சந்திக்கிறார்கள். பின் இவர்கள் எப்படி ஒன்று சேர்ந்தார்கள்? ஹீரோவின் கனவு நனவானதா? என்பதே படத்தின் மீதி கதை. படத்தில் ஹீரோவாக வரும் நஸ்லான் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்.

கல்லூரி மாணவனுக்கான துருதுருப்பும், காமெடி, எமோஷனல் என சிறப்பாக இருக்கிறது. இவரை அடுத்து மமிதாவின் நடிப்பும் சிறப்பு. க்யூட்டாக தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருக்கிறார். இயக்குனர் கதைக்களத்தை கொண்டு சென்ற விதம் நன்றாக இருக்கிறது. குறிப்பாக, இன்றைய இளைஞர்களின் மனநிலையை அறிந்து எடுத்து இருக்கிறார் என்றே சொல்லலாம். சின்ன சின்ன காட்சிகளில் எமோஷனலும் நன்றாக இருக்கிறது.

-விளம்பரம்-

படத்திற்கு ஒளிப்பதிவும், பின்ணணி இசையும் பக்க பலத்தை கொடுத்திருக்கிறது. தமிழ் டப்பிங் நேர்த்தியாக இருக்கிறது. மொத்தத்தில் படம் முழுக்க காதல், காமெடி, கலாட்டா என்று ஒரு முழு பேக்கேஜாக இயக்குனர் கொடுத்து இருக்கிறார்.

நிறை:

கதைக்களம் அருமை

நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்

தமிழ் டப்பிங் நேர்த்தியாக இருக்கிறது

ஒளிப்பதிவு பின்னணி இசை நன்றாக இருக்கிறது

குறை:

ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள் தான் மற்றபடி படத்தில் பெரிதாக சொல்லிக் கொள்ளும் அளவிற்கு குறைகள் எதுவுமே இல்லை

மொத்தத்தில் பிரமேலு – ஜாலி ரைடு

Advertisement