தியேட்டர்களில் வெளியிட வேண்டும் என்றுதான் ஆசை, ஆனால் – ஆஸ்கர் வரை சென்ற கூழாங்கல் படம் குறித்து விக்னேஷ் சிவன்.

0
249
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விக்னேஷ் சிவன். இவர் திரைப்பட இயக்குனர் மட்டுமில்லாமல் நடிகர், திரைப்பட பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு விளங்குகிறார். இவர் போடா போடி என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமாகி இருந்தார். அதன் பின் இவர் விஜய் சேதுபதியை வைத்து நானும் ரவுடி தான், சூர்யாவை வைத்து தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களை இயக்கி இருந்தார்.

-விளம்பரம்-

அதன் பின் இவர் தயாரிப்பில் வெளி வந்து இருந்த ராக்கி படம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதேபோல் கடந்த ஆண்டு விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் இணைந்து காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் பணிபுரிந்து இருந்தார்கள். இந்த படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா, கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், கலா மாஸ்டர் என பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். பெரிய எதிர்பார்ப்புடன் திரைக்கு வந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருக்கிறது.

- Advertisement -

விக்னேஷ் திரைப்பயணம்:

இதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன், அஜித்தின் ‘ஏகே 62’ படத்தை இயக்குவதாக தகவல் வெளியாகி இருந்தது. ஆனால், விக்னேஷ் சிவன் படத்தில் இருந்து விலகி விட்டார்.தற்போது இவர் பிரதீப் ரங்கநாதனை கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார் . இந்த படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க இருக்கின்றது. இந்த படத்தின் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும், தற்போது விக்னேஷ் சிவனின் தயாரிப்பு நிறுவனத்தில் வெளியாகிருக்கும் படம் கூழாங்கல். இந்த படத்தை வினோத் ராஜ் இயக்கி இருக்கிறார்.

கூழாங்கல் படம்:

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். மேலும், இந்த படம் வெளி வருவதற்கு முன்பே சர்வதேசப்பட விழாக்களில் வெளியிடப்பட்டு பல விருதுகளை வென்றிருக்கிறது. குறிப்பாக, இந்தியா சார்பில் சிறந்த அயல்நாட்டு திரைப்படப் பிரிவில் ஆஸ்கர் விருதுக்கும் இந்த படம் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இப்படி புகழ்பெற்ற இந்த படம் தற்போது நேரடியாக சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது. இந்த நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட விக்னேஷ் சிவன், எங்கள் தயாரிப்பில் வெளியான முதல் படம் இது.

-விளம்பரம்-

விக்னேஷ் சிவன் பேட்டி:

ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலமாக வித்தியாசமான புதுமையான நல்ல படங்களை தயாரிக்கலாம் என்று நினைத்தபோது இந்த படத்தை பார்த்தோம். சர்வதேச திரைப்பட விழாக்களில் கொண்டு சேர்த்தால் கொண்டு சர்வதேச அளவில் ரசிகர்கள் இந்த மாதிரியான படங்களை கொண்டாடுவார்கள். நிறைய விஷயங்கள் புதிதாகவும், மன நிறைவாகவும் இருக்கும். நானும் நிறைய சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு சென்று இருக்கிறேன். கான்(Cannes) திரைப்பட விழா போன்ற மற்ற சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு செல்லும்போது அவர்களின் சினிமா ரசனை வேற மாதிரி இருக்கும். அந்த மாதிரி திரைப்படங்களை தயாரிக்க வேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட ஆசை.

கூழாங்கல் படம் குறித்து சொன்னது:

எங்களுக்கு அதிகமான பெருமையை கொடுத்த படம் தான் கூழாங்கல். நாங்கள் எந்த திரைப்பட விழாக்களுக்கு அனுப்பினாலும் ஏதாவது ஒரு விருதை இந்த படம் வென்று கொடுக்கும். குறிப்பாக ஆஸ்கர் விருது தேர்வுக்கு கூட இந்த படம் பரிந்துரை செய்யப்பட்டது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. என்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாத சந்தோஷமான அனுபவங்களை இந்த படம் எனக்கு கொடுத்தது. மேலும் கான் பிலிம் பெஸ்டிவல் கூட என்னை கூழாங்கல் தயாரிப்பாளர் என்று தான் அறிமுகப்படுத்தி கொண்டேன். இந்த படத்தைப் பார்த்து மணிரத்தினம் சார், வெற்றிமாறன் என பலருமே பாராட்டி இருந்தார்கள். அதோடு படத்தை தியேட்டர்களில் வெளியிட வேண்டும் என்று தான் ஆசை. சில காரணங்கள் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. மேலும், இந்த படம் சர்வதேச தரத்தில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணித்தான் ஓடிடியில் வெளியிட்டோம் . இதை ஒரு தொடக்கமாக பார்க்கிறோம் என்று கூறி இருக்கிறார்.

Advertisement