‘தமிழக அரசே இதற்கு தடை விதிக்க வேண்டும்’ வலியால் துடித்த சிறுவனின் வீடியோவை பகிர்ந்து மோகன் ஜி வேண்டுகோள்.

0
230
- Advertisement -

திருமண நிகழ்ச்சி ஒன்றில் சிறுவன் ஒருவனுக்கு நேர்ந்த பரிதாபத்தின் வீடியோவை பகிர்ந்து இயக்குனர் மோகன் ஜி முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக மோகன் ஜி திகழ்ந்து கொண்டிருக்கிறார். பழைய வண்ணார்பேட்டை என்ற படத்தின் மூலம் தான் மோகன் இயக்குனராக தமிழ் சினிமாவில் கால் அடி எடுத்து வைத்தார். பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு மோகன் அவர்கள் திரௌபதி என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் ஜாதி ரீதியாக பிற்போக்கு தனமான கருத்துகளை பேசியிருக்கிறது என்று சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

-விளம்பரம்-
mohan

இப்படி இந்த படம் சமூகத்திற்கு தேவையான ஒரு படம் என்று ஒரு புறமும், இந்த படம் பிற்போக்கான படமாக இருக்கிறது என்று மற்றொரு புறமும் விமர்சனங்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது. ஆனால், இதையல்லாம் தாண்டி இந்த படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று, நல்ல வசூலும் செய்து வருகிறது. இந்நிலையில் தான் இப்படத்தை தமிழ் நாடு முழுவதும் வெளியிட்டிங் GTM Presents நிறுவனத்தின் தயாரிப்பாளர் கௌதம் இயக்குனர் மோகன் ஜியை பாராட்டும் வகையில் பரிசு ஒன்றை வழங்கினார்.

- Advertisement -

மோகன் இயக்கிய படங்கள் :

இருந்தாலும் இந்த படம் மக்கள் மத்தியில் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனை அடுத்து இயக்குனர் மோகன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் ருத்ரதாண்டவம். இந்த படமும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை மையமாக கொண்ட கதை. இந்தப் படத்தை குறித்தும் சோசியல் மீடியாவில் சில சர்ச்சைகள் எழுந்து இருந்தது. இப்படி இவர் இயக்கிய மூன்று படங்களும் விமர்சன ரீதியாக தோல்வி இருந்தாலும் சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

பகாசூரன் :

இப்படி ஒரு நிலையில் இவர் பகாசூரன் என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தில் செல்வராகவன் நாயகனாக நடித்துஇருந்தார். மேலும், நட்டி, ராதாரவி, vj லயா என்று பலர் நடித்த இந்த படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்து இருந்தார்.சமூகத்தில் பெண்கள் பாலியில் தொழில் எப்படி சிக்குகிறார்கள், செல் போன்கல் மற்றும் சமுக வலைத்தளத்தினால் பெண்களுக்கு என்னென்ன பிரச்சனை வருகிறது போன்றவற்றை மையமாக வைத்து இந்த படத்தை இயக்கி இருந்தார்.

-விளம்பரம்-

சிறுவனுக்கு நேர்ந்த கதி :

இந்த படமும் ஓரளவிற்கு வெற்றியை கண்டது. சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் மோகன் ஜி அடிக்கடி சமுதாய கருத்துக்களையும் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் சிறுவன் ஒருவன் ஸ்மோக்கிங் பிஸ்கெட் எனப்படும் திரவ நைட்ரஜன் அடங்கிய பிஸ்கெட்டை உண்டு துடிக்கும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர் ‘ இது போன்று விற்கும் SmokeBiscuit என்ற திண்பண்டத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும்.

மோகன் ஜி வேண்டுகோள் :

குழந்தைகள் புகையை பார்த்து ஆசையாக சாப்பிட அடம் பிடிப்பார்கள்.. அதில் ஊற்றப்படுவது LiquidNitrogen.. ஒரு ஸ்பூன் உட்கொண்டால் கூட உயிருக்கு ஆபத்து.. தமிழக அரச இதற்கு தடை விதிக்க வேண்டும்’ என்று முதலைச்சர் ஸ்டாலினை டேக் செய்துள்ளார். மேலும், இது உண்மையா என்று பயனர் ஒருவர் கேட்க ‘சென்னை தீவு திடலில் இந்த வருடம் நடந்த அரசு பொருட்காட்சியில் இரண்டு கடைகள் இதற்காக ஒதுக்கப்பட்டன.. பல கடற்கரைகளில் விற்பனை செய்கிறார்கள்.. திருமண விழாக்களில் தருகிறார்கள்’ என்றும் பதில் அளித்துள்ளார் மோகன்.

Advertisement