விஜய் ரசிகர்ளை ஏமாற்றினாரா யுவன்? விசில் போடுவை விட கவின் பட பாட்டு தான் விசில் போட்ற மாதிரி இருக்கு.

0
309
- Advertisement -

சமீத்தில் வெளியான GOAT படத்தின் விசில் போடு பாடல் விமர்சனங்களை சந்தித்து வரும் நிலையில் தற்போது கவின் நடிப்பில் உருவாகி உள்ள ‘ஸ்டார்’ படத்திற்கு யுவன் போட்டுள்ள குத்து பாடல் வைரலாகி வருகிறது. லியோ படத்தை தொடர்ந்து தற்போது விஜய் GOAT படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் முதல் பாடலான ‘விசில் போடு’ பாடம் வெளியாகி இருந்தது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகி இருக்கும் இந்த பாடலுக்கு மதன் கார்க்கி பாடல் வரிகளை எழுதி இருக்கிறார். மேலும், ராஜு சுந்தரம் இந்த பாடலுக்கு நடனமைத்து இருக்கிறார்.

-விளம்பரம்-

விஜய் பாடியுள்ள இப்பாடல் யூட்யூபில் தற்போது வரை 30 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ட்ரெண்டிங்கில் நமபர் 1 இடத்தில் இருக்கிறது. ஆனாலும், இந்த பாடல் ஒரு தரப்பு ரசிகர்ளை அதிருப்தியில் ஆழ்த்தி இருக்கிறது. இந்த பாடலுக்கு யுவனுக்கு பதிலாக அனிருத் இசையமைத்து இருக்கலாம் என்று ஒரு தரப்பு கூறி வரும் நிலையில் இன்னொரு புறம் இந்த பாடலின் வரிகள் நன்றாக இல்லை என்றும் கூறி வருகின்றனர்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் யுவன் ஷங்கர் ராஜாவின் இன்ஸ்டாகிராம் கணக்கு திடீரென முடங்கியது. விசில் போடு பாடலுக்கு குவிந்த எதிர்மறை விமர்சனங்களால் தான் யுவன் ஷங்கர் ராஜா தனது இன்ஸ்டா பக்கத்தை முடக்கியதாக சர்ச்சை எழுந்தது. இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள யுவன் ‘சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக தான் தனது இன்ஸ்டா பக்கம் முடங்கியதாகவும் விரைவில் திரும்ப வருவேன்’ என்றும் கூறியுள்ளார்.

இப்படி ஒரு நிலையில் யுவன் ஷங்கர் ராஜா, கவின் படத்திற்க்கு இசையமைத்துள்ள பாடல் பெரும் வரவேற்ப்பை பெற்று இருக்கிறது. டாடா படத்தை தொடர்ந்து தற்போது கவின் ‘ஸ்டார்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ஹரிஷ் கல்யானை வைத்து ‘பியார் பிரேமா காதல்’ படத்தை இயக்கிய இளன் இயக்குகிறார். மேலும், இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா தான் இசையமைத்துள்ளார்.

-விளம்பரம்-

சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் மற்றொரு பாடல் இன்று வெளியாகி இருக்கிறது. கல்லூரி விழா ஒன்றில் பெண் கெட்டப் அணிந்து கவின் இந்த பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ளார். இந்த பாடலை கேட்ட ரசிகர்கள் பலரும் GOAT படத்தின் விசில் போடு பாடலை விட இந்த பாடல் நன்றாக இருக்கிறது என்று கூறி வருகின்றனர்.

Goat படத்தின் பாடல் வெளியான போது அந்த பாடலை பலரும் விமர்சனம் செய்தனர். மேலும், மாஸ்டர், லியோவை போல இந்த படத்திற்கும் அனிருத்தே இசையமைத்து இருக்கலாம் என்று பலரும் கூறி வந்தனர். இதனால் யுவன் ஷங்கர் ராஜாவை பலரும் சமூக வலைத்தளத்தில் கேலி செய்தனர். ஆனால், இந்த பாடலை தொடர்ந்து யுவன் ரசிகர்கள் பலரும் இப்போ தெரியுதா யுவன் யார்ன்னு என்று காலரை தூக்கி பெருமைபட்டுள்ளனர்.

Advertisement