-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு தொலைக்காட்சி

அட, மைனாவின் கணவர் யோகேஷ் இந்த பழம் பெரும் நடிகரின் பேரனாம். (எம் ஜி ஆர் முதல் ரஜினி படத்தில் எல்லாம் நடித்தவர்)

0
6727
myna

விஜய் தொலைக்கட்சியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை மைனா நந்தினி. சிவகார்த்திகேயன் மற்றும் விமல் நடிப்பில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் சூரிக்கு மனைவியாக நடித்திருந்தார். மேலும், பல்வேறு படங்களில் நடித்துள்ள மைனா சிவகார்த்தியேகன் நடிப்பில் வெளியாகி இருந்த நம்ம வீட்டு பிள்ளை படத்திலும் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

மைனாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் அவரது முதல் கணவர் தற்கொலை செய்து கொண்டார். இது அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான். இதை நடிகை மைனா, சீரியல் நடிகரும் நடன இயக்குனராகவும் இருந்து வரும் யோகேஷ்வரன் என்பவரை மைனா காதலித்து வந்த நிலையில் அவரையே திருமணமும் செய்து கொண்டார் மைனா நந்தினி.

இதையும் பாருங்க : உதயநிதியின் மகனை பாத்தீங்க, அவரோட மகளை பாத்திருகீங்களா. இதோ புகைப்படம்.

நடிகர் யோகேஷ் வேறு யாரும் இல்லை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சத்யா, நாயகி போன்ற சீரியல்களில் நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நந்தினி மற்றும் யோகேஸ்வரனின் திருமணம் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்றுது. கடந்த ஆண்டு தான் மைனா நந்தினிக்கு ஒரு அழகான ஆண் குழந்தையும் பிறந்தது. குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே சீரியலில் நடிக்க வந்துவிட்டார் நந்தினி.

-விளம்பரம்-

தற்போது இவர்கள் இருவரும் விஜய் தொலைக்காட்சியில் துவங்கி உள்ள Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்துகொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய யோகேஷ், தான் பழம் பெரும் நடிகர் ராமதாஸ் பேரன் என்பதை கூறி இருந்தார். அப்போது பேசிய யோகேஷ்,“நான் என்னென்னவோ முயற்சி செய்தேன்.. திரைத்துறைக்கு வரும் யோசனையே இல்லை. ஆனால் அப்போதெல்லாம் என் தாத்தா திரைத் துறையைச் சார்ந்தவர் என்பது எனக்கு தோன்றவே இல்லை.இப்போது திரைத்துறையில் வளரும் இந்த வேளையில் தாத்தா உடன் இல்லை என தோன்றுகிறது!” என்று கூறி இருந்தார்.

-விளம்பரம்-
-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news