பதான் படத்தின் பாடல் குறித்த சர்ச்சையில் வாயை கொடுத்து பாஜக ஆதரவு பெண் எம்பி மாட்டிக் கொண்டிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. பாலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ஷாருக்கான். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. மேலும், இவர் இந்தியில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டு இருக்கிறார்.
ஷாருக்கான் அவர்கள் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். அட்லீ – ஷாருக்கான் கூட்டணியில் உருவாகும் படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு லயன் என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்தில் நயன்தாரா, ப்ரியாமணி, யோகிபாபு உட்பட பல நடிகர்கள் ப்ரியாமணி, வருகிறார்கள். இந்த படம் அதிரடி ஆக்சன் கதைக்களத்தை கொண்டது ஆகும். இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
பதான் படம்:
இதனை அடுத்து ஷாருக்கான் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பதான். இந்த படத்தில் தீபிகா படுகோன் நடித்திருக்கிறார். சித்தார்த் ஆனந்த் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படம் யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கிறது. இந்த படம் இந்தியில் மட்டும் இல்லாமல் தமிழ், தெலுங்கு மொழிகளிலும் வெளியாக இருக்கிறது. இந்த படம் ஜனவரி 25ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனால் இந்த படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டு இருக்கிறது. மேலும், ஷாருக்கானின் பிறந்த நாளை முன்னிட்டு பதான் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருந்தது.
பாடல் குறித்த சர்ச்சை:
சமீபத்தில் பதான் படத்தின் ‘பேஷரம் ரங்’ பாடல் வெளியாகியிருந்தது. இந்த பாடலில் நடிகை தீபிகா படுகோன் காவி நிறத்தில் படு கவர்ச்சியாக உடை அணிந்தும், கதாநாயகனான ஷாருக்கான் பச்சை நிறம் அணிந்தும் நடனமாடி இருந்தனர். இதனால் இது குறித்து பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள். இது கருத்து மத்திய பிரதேச அமைச்சர் டாக்டர் நரோத்தம் மிஸ்ரா, இந்த பாடலில் சில காட்சிகள் தவறான மனநிலையை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறது. அவற்றை நீக்க வேண்டும். இல்லையென்றால் இந்த படம் மத்திய பிரதேசத்தில் வெளியிடுவதில் சிக்கல் ஏற்படும். எங்கள் மாநிலத்தில் வெளியிடலாமா? வேண்டாமா? என்பதை பற்றி நாங்கள் தான் யோசித்து முடிவு எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
பாடல் குறித்த எதிர்ப்புகள்:
மேலும், பாஜக தலைவர்கள் மற்றும் இந்துத்துவ அமைப்பினர் பலரும் கடும் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் மத்திய பிரதேசத்தில் ஷாருக்கானின் உருவ பொம்மைகளை எரித்து போராட்டத்திலும் இந்து அமைப்பினர் ஈடுபட்டிருக்கின்றனர். இந்த நிலையில் முன்னாள் நடிகையும், பாஜக ஆதரவு எம்பியுமான நவ்நீத் ராணா பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர், நாங்கள் மிகவும் நேர்மையாக இருக்கிறோம். ஆனால், எங்கள் மத உணர்வுகளுடன் தொடர்ந்து விளையாடி வருகிறீர்கள். தணிக்கை வாரியம் தங்களது பணியை சரியாக செய்ய வேண்டும். இதுபோன்று மத உணர்வுகளுடன் விளையாடும் காட்சிகள் இருப்பின் அந்த காட்சிகளை தணிக்கை செய்யப்பட வேண்டும்.
பாஜக எம்பியின் பழைய காவி வீடியோ:
திரையரங்கில் திரையிடும் போது காட்சிகள் இடம் பெற்றிருக்கக் கூடாது. இதற்கு தணிக்கை வாரியம் தான் உறுதி செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். இப்படி இவர் கூறியிருந்த கருத்து சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து பலரும் பாஜக நவ்நீத் ராணாவின் பழைய தமிழ் பாடல் வீடியோவை சோசியல் மீடியாவில் பதிவிட்டு, இந்த பாடல் உங்களுக்கு நினைவிருக்கிறதா? என்று சர்ச்சை எழுப்பி இருக்கிறார்கள். அதாவது, கடந்த 2012 ஆம் ஆண்டு வெளிவந்த அம்பாசமுத்திரம் அம்பானி திரைப்படத்தில் நவ்நீத் ராணா காவி உடையில் கவர்ச்சியாக நடனம் மாறி இருக்கிறார். இதை தான் நெட்டிசன்கள் விமர்சித்து கிண்டல் செய்து வருகிறார்கள்.