கர்ப்ப காலத்தில் வித்தியாசமாக அம்மன் கான்செப்டில் போட்டோ ஷூட் நடத்திய நடிகை நீலிமா. ரசிகர்கள் மத்தியில் செம வைரைலாகும் புகைப்படங்கள். தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் நீலிமா ராணி. உலக நாயகன் கமல் நடித்த தேவர் மகன் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகிற்கு அறிமுகமானவர் நீலிமா ராணி. அதன் பின்னர் இவர் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார்.பின் டும் எனும் படத்தின் மூலம் துணை கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கினார்.
மேலும், இவர் பல்வேறு திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து உள்ளார். அதோடு இவர் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் இவர் தமிழ்,தெலுங்கு, மலையாளம் என பல மொழி தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் இதுவரை 15 க்கும் மேற்பட்ட தமிழ் மெகா சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடைசியாக இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அரண்மனை கிளி என்ற தொடரில் நடித்து இருந்தார்.
இதையும் பாருங்க : திருமண நலங்கு வீடியோவை தங்களின் முதல் யூடுயூப் சேனலின் முதல் வீடியோவாக பதிவிட்டுள்ள சித்து – ஸ்ரேயா.
இதனிடையே நீலிமா அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்னர் தன்னுடன் சீரியலில் நடித்த அஷ்வின் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்னர் இவருக்கு அழகான ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. தற்போது நீலிமா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில் இதுவரை யாரும் செய்யாத வித்தியாசமாக மேட்டர்னிட்டி போட்டோ ஷூட் நீலிமா நடத்தியிருந்தார். அந்த புகைப்படத்தில் நீலிமா தாமரைமேல் ஒரு அழகான கர்ப்பிணி அம்மனாக இருக்கும் அவதாரத்தில் உள்ளார்.
அந்த புகைப்படங்கள் பார்ப்பதற்கே பிரம்மிக்க வைக்கும் வகையில் இருந்தது. இதை பார்த்து பலரும் நீலிமாவுக்கு வாழ்த்துக்களை செய்து வருகிறார்கள். மேலும், இந்த போட்டோஷூட்டை எடுத்த போட்டோகிராபர் ஆர்.பிரசன்னா வெங்கடேஷ் கூறியது, இந்த போட்டோ ஷூட் எடுப்பதற்கு காரணம் ஒரு பெங்காலி ஓவியரின் படம் பார்த்து தோன்றியது தான். எல்லோருக்கும் உயிர் கொடுத்தது அம்மா என்பதால் தாய்மையை வலியுறுத்தி சிவன்-பார்வதி கான்செப்டில் இந்த போட்டோ ஷூட் பண்ணோம்.
ஒரு மாதத்துக்கு முன்னாடியே இதற்கான திட்டமிடல் எல்லாம் ஆரம்பிக்க தொடங்கியது. திட்டமிடல் எல்லாம் சரியாக நடந்தால் இந்த மொத்த போட்டோ சூட்டையும் அரை நாளில் எடுத்து முடிந்துவிட்டது. தாமரை மலர்களை எல்லாம் தெர்மாகோல் அட்டைகளால் தத்ரூபமாக பண்ணி இருந்தார்கள். இந்த போட்டோ ஷூட் சோஷியல் மீடியாவில் வைரலாகி நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது என்று கூறினார்.