அந்த படத்துல என் நடிப்பை பார்த்துட்டு தான் கார்த்திக் சார் என்னை கூப்பிட்டார் – ஜிகர்தண்டா படத்தில் மிரட்டிய போலீஸ்.

0
212
Jigirthanda
- Advertisement -

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் வில்லனாக நடித்த அனுபவம் குறித்து பேட்டியில் நவீன் சந்திரா கூறி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகராக மட்டும் இல்லாமல் நடன இயக்குனராக இருப்பவர் ராகவா லாரன்ஸ். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாகி இருந்த படம் சந்திரமுகி 2. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.

-விளம்பரம்-

தற்போது ராகவா லாரன்ஸ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். ஏற்கனவே கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியிருந்த ஜிகர்தண்டா படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. அதனை அடுத்து தற்போது வித்தியாசமான வேறுபட்ட கதைகளத்தில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை கார்த்தி சுப்புராஜ் இயக்கியிருக்கிறார்.

- Advertisement -

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம்:

இந்த படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா, நிமிஷா, நவீன் சந்திரா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. மேலும், இந்த படத்தில் இரக்கம் இல்லாத கொடூர வில்லனாக நடித்திருந்தவர் நவீன் சந்திரா, இவர் தெலுங்கில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

நவீன் சந்திரா திரைப்பயணம்:

இவர் தெலுங்கில் 2012 ஆம் ஆண்டு வெளியான அந்தால ராட்சசி என்ற காதல் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் தெலுங்கில் பல படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் தமிழில் இவர் பிரம்மன், சரபம், சிவப்பு, பட்டாஸ் போன்ற படங்களிலும் வில்லனாக மிரட்டி இருக்கிறார். தற்போது இவர் ராகவா லாரன்ஸ் நடித்த ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

நவீன் சந்திரா பேட்டி:

இந்நிலையில் இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து நவீன் சந்திரா கூறியிருப்பது, இந்த படத்திற்கு இவ்வளவு வரவேற்பு கிடைத்தது நினைத்தால் சந்தோஷமாக இருக்கிறது. என்னுடைய வில்லன் வேடத்தையும் ரசிகர்கள் பாராட்டுகிறார்கள். தியேட்டருக்கு சென்று பார்த்திருந்தேன். பெண்கள் என்னுடைய கதாபாத்திரத்தை ரசித்துப் பார்த்தது ரொம்ப பெரிய விஷயமாக இருக்கிறது. நான் நடித்த அம்மு என்ற தெலுங்கு படத்தின் போஸ்டர் வேலைகள் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தில் நடந்தது. அதில் என் நடிப்பை பார்த்துவிட்டு கார்த்திக் சுப்புராஜ் விசாரித்தார்.

படம் குறித்து சொன்னது:

அதற்கு பிறகு தான் நான் அவரை சந்தித்தேன். இந்த படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிப்பது குறித்து சொன்னார். உடனடியாக நான் சம்மதித்தேன். தெலுங்கிலும் நான் நடித்து வருவதால் கால்ஷீட் சிக்கல் இருந்தது. இதனால் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் எனக்காக அவர் படபிடிப்பை சரி செய்தார். இது மிகப்பெரிய விஷயம். இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ் ஆகியோர் உடன் நடித்தது சிறந்த அனுபவம். தமிழில் தொடர்ந்து சிறந்த கதைகளை தேர்வு செய்து நடிக்க இருக்கிறேன். அடுத்து சங்கர் இயக்கும் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறேன். இதிலும் சிறப்பான கதாபாத்திரம் என்று பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

Advertisement