இரண்டாம் திருமணத்திற்கு பின்னும் கழுத்தில் தாலி போடாதது இதனால் தான் – ஜூலி கேள்விக்கு தாமரை சொன்ன பதில்.

0
635
thamarai
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி சமீபத்தில் தான் வெற்றிகரமாக முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் ராஜிவ் முதல் இடத்தையும், இரண்டாம் நிகழ்ச்சியில் பிரியங்காவை பெற்றிருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. மேலும், கடந்த சீசன்களை விட இந்த முறை நிகழ்ச்சியில் பல மாற்றங்களை பிக் பாஸ் கொண்டு வந்திருந்தார். அதிலும் தெரிந்த முகத்தை விட தெரியாத முகங்கள் தான் அதிகமாக இருந்தார்கள். முகம் தெரியாத நபராக அறிமுகமாகி தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் தாமரை. இவர் நாடகக் கலைஞர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இவர் ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு குழந்தைக்கு தகப்பனான ஒருவரை திருமணம் செய்துள்ளார். அவருடன் ஒரு மகனையும் பெற்றுள்ளார் தாமரை.

-விளம்பரம்-

பின் அந்த வாழ்க்கை பிரச்னையில் முடியவே பின் வேறு ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போதும் இவர் தனது பிள்ளைகளுக்காக தான் நாடகத்தில் நடித்து வருகிறார். இதன் மூலம் தான் தாமரைக்கு பிக் பாஸ் வீட்டில் நுழையும் வாய்ப்பு கிடைத்தது. பிக் பாஸ் வீட்டில் நுழைந்த சில நாட்களிலேயே தாமரை தனது வெள்ளந்தியான குணத்தால் அனைவரையும் கவர்ந்தார். ஆரம்பத்தில் அப்பாவி போல இருந்த தாமரை பல வாரங்களை கடந்து புயலாக மாறி டாப் 10 போட்டியாளர்களில் ஒருவராக வந்தது பாராட்டாக்கூடிய ஒன்று.

- Advertisement -

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி:

மேலும், பிக் பாஸ் வீட்டில் இருந்த போது தாமரை பலருடன் நல்ல உறவில் இருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்தது என்று சொல்லலாம். தற்போது தாமரை பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கின்றார். ஒரு புது வித பிக் பாஸ் நிகழ்ச்சியை விஜய் டிவி அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த நிகழ்ச்சியை டிவி ஷோ போல் ஒரு மணி நேரம் இல்லாமல் 24 மணி நேரமும் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகின்றது. இதில் பிக் பாஸ் சீசன் 1முதல் 5 வரையிலான போட்டியாளர்கள் வனிதா, சினேகன், சுஜா வருணி, அபிநய், அனிதா, பாலாஜி முருகதாஸ், தாடி பாலாஜி, சுருதி, பாலாஜி செல்வி, ஷாரிக், நிரூப், ஜூலி, தாமரை, சுரேஷ் சக்கரவர்த்தி ஆகிய 14 பேர் கலந்துகொண்டனர்.

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி எலிமினேஷன்:

முதல் நாளே பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்குள் வன்மம் கலவரம் தொடங்கி விட்டது. இதனால் பயங்கரமாக ஒருவரை ஒருவர் தாக்கி பேசி வருகிறார்கள். மேலும், அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து முதல் வாரம் சுரேஷ் சக்கரவர்த்தி எலிமினேட் ஆகி இருந்தார். பிறகு பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இரண்டாம் நாமிநேஷன் நடந்தது. அதுவும் இந்த முறை நேரடி நாமிநேஷன் நடத்தி இருந்தார்கள். அதில் சுஜா, ஜூலி, அபிநய், பாலாஜி முருகதாஸ் , தாடி பாலாஜி, தாமரை ஆகிய 6 பேர் நாமினேஷன் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

தாமரையிடம் ஜூலி கேட்ட கேள்வி:

மேலும், தாமரைச்செல்வி அல்டிமேட்டில் சிறப்பாக விளையாடி வருகிறார். இவர் அனிதா, ஜூலி இவர்களுடன் அதிகநேரம் இருக்கிறார். அந்த வகையில் ஜூலி தாமரையிடம் ஏன் தாலி அணியவில்லை? என்று கேட்டிருக்கிறார். இதற்கு விளக்கம் கொடுத்து தாமரை கூறியிருப்பது, நான் வெளியில் சென்றவுடன் தான் தாலி வாங்கி அணிய வேண்டும். நாங்கள் திருமணம் செய்யும் போது கவரிங் தாலி வாங்கி கல்யாணம் செய்து கொண்டோம். கவரிங் எனக்கு செட் ஆகவில்லை.

விளக்கம் கொடுத்த தாமரை:

அதனால் தான் அதை எடுத்து வைத்து விட்டேன். மேலும், வெளியில் சென்ற பிறகு தான் தாலி வாங்கி போட்டுக் கொள்ள வேண்டும் என்று தாமரை கூறியிருக்கிறார். இப்படி தாமரை உணர்ச்சிபூர்வமான பேசியிருப்பது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தாமரை திருமணம் ஆகி ஒரு குழந்தைக்கு தகப்பனான ஒருவரை திருமணம் செய்துள்ளார்கள். அவருடன் ஒரு மகனையும் பெற்றுள்ளார் தாமரை. பின் அந்த வாழ்க்கை பிரச்னையில் முடியவே வேறு ஒருவருடன் திருமணம் செய்து கொண்டார்.அந்த வாழ்க்கை பிரச்னையில் முடியவே தாமரை செல்வி இரண்டாம் திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement