‘ஏதோ நினைக்கிறேன் அதை ஏனோ மறக்கிறேன்’ – இந்த நடிகை யாரென்று தெரிகிறதே 90ஸ் ரசிகர்களே ?

0
1177
Jyothirmayee
- Advertisement -

தமிழ் சினிமா எத்தனையோ மலையாள நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது. பாவனா,நஸ்ரியா துவங்கி நயன்தாரா வரை பல நடிகைகள் மலையாள கரையில் இருந்து வந்தவர்கள் தான். அந்த வகையில் இந்த ஜோதிர்மயியும் மலையாளத்தில் இருந்து வந்தவர் தான் . இவர் டிவி நிகழ்ச்சி மூலம் தான் தன் வாழ்கை பயணத்தை தொடங்கினார். அதன் பின் இவர் பலைட் என்ற மலையாள மொழி படம் மூலம் தான் சினிமா உலகிற்கு வந்தார். இவர் மம்மூட்டி, மோகன்லால் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் படங்களில் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-

2006 ஆம் ஆண்டு சுந்தர் சி நடிப்பில் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது தலைநகரம் திரைப்படம். இந்த படத்தின் மூலம் தான் இயக்குனர் சுந்தர் சி முதன் முறையாக ஹீரோவாக களமிறங்கி இருந்தார். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார் நடிகை ஜோதிர்மயி. அதன் பிறகு நான் அவனில்லை, சபரி, அறை எண் 305ல் கடவுள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

- Advertisement -

தமிழில் ஒரு சில படங்களில் நடித்தாலும் இவரால் முன்னணி நடிகைகளில் ஒருவராக வர முடியவில்லை. இவர் தமிழில் கடைசியாக 2009 ஆம் ஆண்டு வெளிவந்த வெடிகுண்டு முருகேசன் என்ற படத்தில் தான் நடித்திருந்தார். இந்த படத்தில் கதாநாயகனாக பசுபதி நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு இவருக்கு தமிழில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பிறகு இவர் மலையாள சினிமா பக்கமே சென்று விட்டார்.

இந்நிலையில் நடிகை ஜோதிர்மயி அவர்களின் இரண்டாவது கணவர் அமல் நீரத் அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜோதிர்மயின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். அந்த புகைபடத்தில் நடிகை ஜோதிர்மயி அவர்கள் மொட்டை அடித்துக் கொண்டு இருந்தார். இதை பார்த்து பலரும் பலவிதமாக கமெண்ட் தெரிவித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

நடிகை நஸ்ரியாவின் இதுகுறித்து இமோஜ் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அனைவரும் ஏன் திடீரென்று இந்த செயல் என்று பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். லாக் டவுன் சமயத்தில் நடிகை ஜோதிர்மயின் இந்த செயல் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

This image has an empty alt attribute; its file name is image-443.png

மேலும், நடிகை ஜோதிர்மயி அவர்கள் இவர் பிரபல தயாரிப்பாளரும், இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான அமல் நீரத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அமல் நீரத் அவர்கள் ராம்கோபால் வர்மாவின் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். பின்னர் பாலிவுட் படங்கள் சிலவற்றிற்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். தொடர்ந்து இவர் மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால், பிருத்விராஜ் போன்ற பல முன்னணி நடிகர்களை வைத்து படத்தை இயக்கினார்.


Advertisement