இன்னோருத்தரின் பிச்சையில் வாழ தேவயயில்லை – குஷ்பூவின் பேச்சை தொடர்ந்து சர்ச்சைக்கு உள்ளான நிர்மலா சீத்தாராமன் பேச்சு

0
107
- Advertisement -

குஷ்பூ பேசிய சர்ச்சை கருத்து அடங்கும் முன்பே மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசி இருக்கும் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் பேசும்பொருளாகி இருக்கிறது. சமீபத்தில் போதை பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பாக சென்னையில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று இருக்கிறது. இதில் கலந்து கொண்ட குஷ்பூ, தயாரிப்பாளர் ஜாபர் இடம் மட்டும் சுமார் 3000 கிலோ போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், இதைப்பற்றி திமுக கூட்டணி கட்சிகள் ஏதாவது வாய் திறந்ததா? இல்லை. காரணம், அந்த ஜாபர் சாதிக் திமுகவுக்கும் பணம் கொடுத்திருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் பிச்சை போட்டால் திமுகவுக்கு அவர்கள் ஓட்டு போட்டு விடுவார்களா? தாய்மார்களின் நீண்ட நாள் கோரிக்கையே டாஸ்மாக்கை இழுத்து மூடுவது தான். தில் இருந்தால் நீங்கள் அதை செய்யுங்கள் பார்க்கலாம். போதை பொருள் பிரச்சனையை நீங்கள் தீர்த்து வைக்கவில்லை என்றெல்லாம் திமுகவை விமர்சித்து பேசியிருக்கிறார். இப்படி குஷ்பூ மகளிர் உரிமை தொகையை பிச்சை என்று கூறி இருந்தது மிகப்பெரிய அளவில் சர்ச்சையாகி இருக்கிறது.

- Advertisement -

நிர்மலா சீதாராமன் வீடியோ:

இது குறித்து அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள். இந்த நிலையில் பாஜகவின் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் சமீபத்தில் நடந்த கூட்டத்தில், எப்பவுமே நாம் இன்னொருத்தர் போடும் பிச்சையில் வாழ வேண்டிய அவசியம் கிடையாது. பொதுவாகவே சில கட்சிகள் வெள்ளம் வந்தால் இந்தா ஆயிரம் எடுத்துக்கோ, வீடு இடிந்து விட்டதா இந்த 500 எடுத்துக்கோ என்று பிச்சை போடுகிறார்கள்.

உதவி தொகை குறித்து சொன்னது:

அப்படி வாழ வேண்டிய அவசியம் நமக்கு கிடையாது. இதெல்லாம் நல்ல அரசியல் கிடையாது. தூர நோக்கு இருக்கணும். நல்ல அரசியலுக்கு கொள்கைகள், கமிட்மென்ட் இருக்கணும். இப்படி இருந்தால்தான் ஒரு நல்ல நாடு உருவாகும் என்று கூறியிருக்கிறார். அதைத்தொடர்ந்து நிர்மலா சீதாராமன், கோயில்களை அழிக்கணும், கோயில் காசை சுரண்டி திண்பவர்கள், மதத்தை அழிப்பேன் என்பவர்களுக்கு ஏன் ஓட்டு போடுகிறீர்கள்.

-விளம்பரம்-

மதம் குறித்து சொன்னது:

மதம் வேண்டாம், கோயில் வேண்டாம் என்று சொல்பவர்களுக்கு ஓட்டு போட வேண்டாம். மத்திய அரசே, மோடி கோயிலை கட்டுப்படுத்தின மாதிரி தமிழ்நாட்டை கட்டுப்படுத்த முடியுமா? என்று கேட்கிறார்களே ஏன் கேட்கிறீர்கள்? உங்களுடைய ஒவ்வொரு ஓட்டில் அந்த பவர் இருக்கிறது. ஓட்டை பார்த்து போடுங்கள் என்று பேசி இருக்கிறார். இப்படி இவர் பேசி இருக்கும் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் மீண்டும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

குஷ்பூ திரைப்பயணம்:

தென்னிந்திய சினிமா உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் குஷ்பூ. இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. தற்போதும் இவர் படங்களில் கவனம் செலுத்தி நடித்து தான் வருகிறார். இவர் வெள்ளி திரையில் மட்டும் இல்லாமல் சின்னத்திரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியும் இருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க, இவர் அரசியலிலும் அதிக ஈடுபாடு காண்பித்து வருகிறார். தற்போது இவர் பாஜகவில் இணைந்து இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் தேசிய மகளிர் ஆணைய குழுவில் ஒருவராகவும் குஷ்பு இருக்கிறார்.

Advertisement