தெலுங்கில் எந்த பிரச்சனையும் சந்தித்தது இல்லை,ஆனால், தமிழ் சினிமாவில் பல தொல்லைகளை சந்தித்தேன் – நித்யாமேனன் கொடுத்த ஷாக்.

0
916
- Advertisement -

தமிழ் சினிமாவின் ஆரம்ப காலத்தில் இருந்து பெண்களுக்கு நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்தும் இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் அவர்களின் அட்டூழியங்கள் குறித்து செய்திகள் அவ்வப்போது வெளியாகத்தான் இருக்கிறது. அந்த வகையில் சில ஆண்டுகளுக்கு முன்பு பின்னணி பாடகி சின்மயி Me too வில் வைரமுத்து மீது குற்றம் சாட்டினார் இது பரபரப்பாகியது அதேபோல் சமீபத்தில் தனக்கு நடந்த பாலியல் தொல்லைகள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் நடிகை நித்யா மேனன்.

-விளம்பரம்-

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் நித்யா மேனன். இவர் நடிகர் சித்தார்த் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான 180 படத்தின் மூலம் தான் தமிழில் அறிமுகமாகி இருந்தார். இந்த படத்தை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் விஜய்யுடன் மெர்சல், சூர்யாவுடன் 24, விக்ரமுடன் இருமுகன் என்று தமிழில் உள்ள பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார். பின் மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளிவந்த சைக்கோ படத்தில் நித்யா நடித்திருந்தார்.

- Advertisement -

அதற்கு பிறகு அம்மணி பெரிதாக படங்களில் காணவில்லை. இடைப்பட்ட காலத்தில் குண்டாக இருந்த நித்யா மேனன் உருவக் கேலிக்கும் உள்ளாகி இருந்தார். இதனால் உடல் எடையை குறைக்க முடிவு செய்த நித்யா மேனன் அவர்கள் சித்தா மற்றும் சில உடற்பயிற்சிகளை மேகொண்டு இருந்தார். அதன் பலனாக தற்போது உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறி இருக்கிறார். சமீபத்தில் நித்யா மேனன் உடலை குறைத்த புகைப்படங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது.

நித்யா மேனன் நடிக்கும் படம்:

இதனால் இவருக்கும் மீண்டும் பட வாய்ப்புகள் வரத்துவங்கி இருக்கிறது. தற்போது தனுஷின் 44வது படமான ‘திருச்சிற்றம்பலம்’ என்ற படத்தில் நித்யா மேனன் நடித்து இருக்கிறார். இந்த படத்தை மித்ரன் ஜவஹர் இயக்குகிறார். இந்த படம் ஆகஸ்ட் 18-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ்- இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மீண்டும் இணைந்துள்ளனர். இந்த படத்தில் படத்தில் தனுஷ், நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா, பாரதிராஜா மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

-விளம்பரம்-

அவர் தெரிவித்தது:

நித்யா மேனன் தனக்கு நடந்த அந்த தொல்லைகள் குறித்து வெளிப்படையாக தெரிவித்து இருந்தார். எல்லாத்துறையிலும் துன்புறுத்தல்கள் இருக்கின்றது அதேபோல் தான் சினிமா துறையும் திரைப்படத்துறை ஒன்றுவதற்கு விதிவிலக்கு அல்ல என்று பேசி இருந்தார். தெலுங்கு சினிமாவில் இது வரை எனக்கு எந்த பிரச்சினையும் அந்த இல்லாதற்கு நன்றி தெரிவித்தவர். தமிழ் திரையுலகில் நான் சந்தித்த சோதனை குறித்தும் அதை அவர் இந்த நபரின் பெயரை குறிப்பிடாமல் அவர் பேசினார்.

மேலும் அந்த நபரின் அடையாளத்தை மர்மமாக வைத்து விட்டார். அவர் கூறுகையில் ஒரு தமிழ் திரைப்படத்தில் ஒரு முன்னணி ஆண் நடிகர் அவர் தொல்லை செய்தார் என்றும் அறுவருக்க முறையில் நடந்து கொண்டார் பேசினார். நடிகர் நடவடிக்கைகள் அவர் உடல் ரீதியாக ஆக்ரோஷமாக மாறிய போது அவர் எல்லை மீறினார் அது எனக்கு அசோகரித்து ஏற்படுத்தியது மற்றும் படப்பிடிப்பு சீர்குலைத்தது. அது குறித்து வெளியில் தைரியமாக பேசியதற்கு பலரும் பாராட்டி வருகின்றனர்.

Advertisement